பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/93

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


90 விந்தன் வித்திடிருக்கலாம் ஆனால் அதைக் கட்டி வளர்த்த ரஷ்ய எழுத்தாளர் களில் முக்கியமானவன் முதன்மையானவன் மாக்சிம் கார்க்கி-அவன் சொன்னான் 'மனிதன் ஆகா அவனுடைய பெயர்தான் எவ்வளவு கம்பீரமாக ஒலிக்கிறது சர்வ வல்லமை பொருந்திய அவனுக்கு மேலாக ஒருவனை வேறு எதையும் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை ஆம், மனிதாபிமானம் மிக்க மார்க்சிம் கார்க்கியின் தாய்க்கு மேலாக வேறு ஒரு நாவலை என்னாலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லைதான். (ஆனந்தவிகடன் - 1961) விந்தனிடம் "நாவல் எப்படி பிறக்கிறது?’ என்று கேட்டதற்கு அவர் பதில் இதோ. 'என்னைப் பொருத்தவரை நாவல் பிறந்த கதையை நான் சொல்லப் போவதில்லை நாவல் பிறக்கும் கதையைச் சொல்லப் போகிறேன். "அதோ, நாற்பது வருட காலம் இரவும் பகலுமாக மாறி மாறி உழைத்த பிறகு, ஓய்வு பெற்று வருகிறான் ஒரு மில் தொழிலாளி யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே என்பது போல் அவனுக்கு முன்னால் லொக் லொக்' என்ற இருமல் ஓசை வருகிறது அவனை நோக்கிக் குடிசையின் வாசலில் நின்ற அவன் மனைவி வரும்போது சும்மாவரமாட்டார் ஆயிரமோ இரண்டாயிரமோ கொண்டு வருவார், கல்யாணத்துக்குத் தயாராகப் பத்து வருடங்களாகக் காத்திருக்கும் பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைத்துவிடலாம். பையன்களில் யாரையாவது பத்து வகுப்பு வரையிலாவது படிக்க வைக்கலாம். குடிசையைப் பிரித்து கட்டலாம் மாற்றிக் கட்டிக் கொள்ள மறுசேலை வாங்கலாம். மாடும் இரண்டு பிடித்து கொள்ளலாம் என்றெல்லாம் எண்ணமிட்டாள்.' அவன் அவளை நெருங்கினான் 'லொக் லொக்' கொஞ்சம் வெந்நீர் கொண்டு வரட்டுமா என்று கேட்கிறாள் அவள். கொண்டு வா என்றான் வெந்நீர் வருகிறது அதற்குமேல் ஆவலை அடக்கமுடியவில்லை அவளால், 'என்ன கிடைத்தது?" என்கிறாள் அவள் 'டி.பி என்கிறான் அவன் அப்பொழுது அவள் விடுகிறாளே பெருமூச்சு அந்த மூச்சிலிருந்து என் நாவல பிறக்கிறது"