பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள்.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திரையுலக நாயகர்கள் 95 மேடைக்கு அருகில் அவருக்காக நாற்காலி போடப்பட்டிருந்தது சி எஸ் ஜே தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தார் பாகவதர் அவர்கள் எங்கெங்கே தலையாட்டினார்களோ ரசித்தார்களோ அங்கெல்லாம் மக்களும் தலையாட்டி ரசித்தார்கள். சொல்லப்போனால் பாகவதர் ஆமோதிக்கிறார் ரசிக்கிறார் நாமும் ஆமோதிப்போம் ரசிப்போம் என்பது போல இருந்தது இரண்டொரு பாடலைக் கேட்டு ரசித்த பிறகு மக்களின் நெருக்கடியிலிருந்து தப்பிச் செல்வதற்காக பாகவதர் எழுந்து போனார்கள் அப்பொழுது நான் என்ன நினைத்தேனோ அதை அப்படியே எழுதுகிறேன். அங்கே எத்தனையோ விளக்குகள் போடப் பட்டிருந்தாலும், பாகவதர் அந்த இடத்தை விட்டு அகன்றதும் ஏதோ ஒரு இருள் கப்பிக் கொண்டது போல் தோன்றியது எனக்கு மட்டுமல்ல அங்கிருந்த அத்தனை பேருக்கும் அப்படித்தான் தோன்றியது பொன் நிறமான மேனி, பொன் நிறமான சட்டை, கழுத்தைச் சுற்றி சரிகை மட்டும் தெரியும் மேல் வேட்டி, காதுகளிலும் கைகளிலும் மின்னும் வைரங்கள், நெற்றியில் சவ்வாதுப் பொட்டு தலையில் அழகான சுருட்டை முடி, இவை அனைத்தும் தங்கத்தால் வார்த்து எடுக்கப்பட்ட ஓர் உருவத்தில் வைரங்கள் பதித்தது போல காட்சி யளித்தன சுருங்கச் சொல்லப்போனால் தங்கத்தால் ஆன ஒர் உருவம் உயிர்பெற்று வருவது போல இருந்தது அது பாகவதர் அந்த இடத்தை விட்டுப்போனதும் அந்த இடத்திலும் தங்கள் மனத்தாலும் இருள் கூப்பியது போல மக்கள் உணர்ந்தார்கள். இப்படி பாகவதரின் அழகைப் பற்றி, அறிவைப்பற்றி, அவருடைய ஆற்றலைப் பற்றிப் பல தகவல்கள் அடங்கியுள்ளன. இந்நூலில் 岑率率 நடிகவேள் எம்.ஆர் ராதாவைப்பற்றியும் விந்தன் எழுதி யிருக்கிறார் ராதா பற்றி முதன் முதலில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு இதுதான், ஏனெனில், ராதா அவர்களின் வாக்குமூலத்தை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட முதல் நூல் என்பதால், 1962-இல் எம் ஜி.ஆரை, எம் ஆர் ராதா சுட்ட விவகாரம் பத்திரிகையில் பரபரப்பாக எழுதப்பட்டும் பேசப்பட்டதும் உண்டு. அனைத்தும் அடங்கி அமைதியான காலத்தில் எம் ஆர் ராதா சிறையில் இருந்து விடுதலை பெற்று வெளியில் வந்த காலத்தில் எழுதப்பட்டது இத்தொடர் தினமணி கதிர் பத்திரிகையில் இத்தொடர் வெளிவந்த போது காஞ்சி பெரியவர் சந்திரசேகர சுவாமிகள் தொடரைப் படித்து, 'இராதாவின் இவ்வளவு உண்மைகள் நன்றாக எழுதப்படுகிறது' என்று