பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

116

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


பெற்றது. அதன் 65ஆம் ஆண்டு நிறைவு விழாவுக்குத் தலைமை யேற்றபோது, தமது முன்னுரையில்,

“யான் தமிழறிவும் சைவவுணர்வும் பெற்ற நாள்முதல் இச் சைவ சித்தாந்த சபையின் நிகழ்ச்சி களையும், இதன் ஆண்டு விழாக்களில் தலைமை தாங்கிச் சிறப்பித்த சான்றோர்களின் சால்புகளையும், இதன் உறுப்பினர்களின் தமிழன்பு சைவ மெய்த் திருவுடைமைகளையும் நினையும் போதெல்லாம் நேரிற் பன்முறை கண்டறிந்துள்ள என் நெஞ்சம் இத்தலைமைப் பணிவந்த போது ஏற்றற்கு அஞ்சுதலே செய்தது. பெரும்பணி எய்தவரும் போழ்து அதன் பெருமை, முன்னே தோன்றும். அது, காண்பவர் உள்ளத்தில் அச்சம் தோன்றும். அஃது இயல்பு. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை. சுருங்கச் சொல்லுமிடத்து அச்சத்தோடு இப்பணியை மேற்கொள்ளுகின்றேன்!”

என்று அடக்கத்துடனும் பணிவுடனும் கூறியவரே எனினும், ஏறத்தாழ முக்கால் மணிநேரத்திற்கும் குறையாமல் பேருரை யாற்றியுள்ளார்.

அனைத்திற்கு மேலாக, ஆழ்ந்த சமயப் பற்றுடையவர் உரைவேந்தர் என்பதை அவருடைய நூல்கள் பறைசாற்றும். பெரும்பாலான நூல் முன்னுரை மூலம் இவரின் இறைப்பற்றை உணரலாம்.

“...அறிவு, செயல் வகைகளில் ஒருபொருளாகாத எளியனாகிய என்னை, இப்பெரும் பணியில் ஈடுபடுத்தி, இயலும் தொண்டினைப் புரிதற்கு வாய்ப்பளித்து, எனது எண்ணத்தில் என்றும் அகலாது நிலவும் அங்கயற்கண்ணி தன்னோடும் அமர்ந்த ஆலவாய் அண்ணலின் திருவடிகளை மனமொழி மெய்களால் பரவுகின்றேன்!”

(சிவ. சிற்றுரை-குறிப்புரை)

என்று கூறுவது எண்ணத்தகும்.

உரைவேந்தர், கண் மூடித்தனமான பழக்கவழக்கங்கட்கு ஒருபோதும் ஆட்பட்டதில்லை. சைவநெறியில் ஆழ்ந்து தோய்ந்தவரே