பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நிறைபுகழ் எய்திய உரைவேந்தர்

123


‘உரைப் பணிகளின் சிகரம் - திருவருட்பா உரை!’ என்று சொல்லுமளவுக்குப் பணியிலிருந்து கொண்டே 5818 பாடல்களுக்கு உரை கண்டவர் உரைவேந்தர். எப்படி இவரால் இத்துணைப் பக்கங்கட்கு உரை எழுத முடிந்தது என்றே பலரும் வியந்து போற்றுவர். அருட்செல்வர் நா. மகாலிங்கனாரின் பல்வேறு வகையான உதவிகள், உரைவேந்தருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தன எனில் மிகையாகாது!

அன்னைத் தமிழுக்காகவும், ஆன்ற சைவத்திற்காகவும், தமக்கு நினைவு தோன்றிய நாள் முதல், வாழ்நாளின் இறுதிவரையிலும் பாடுபட்ட தமிழ்ச் சான்றோராம் ‘உரைவேந்தர்’, தமது 79ஆம் அகவையில், 3.4.1981ஆம் நாளன்று, மதுரையிலுள்ள தமது இல்லத்தில், ‘சிவப்பேறு’ எய்தினார். மதுரை நகர் இடுகாட்டில் இவர்தம் பூதஉடல் ‘சமாதி’யில் வைக்கப்பட்டு, அவ்விடத்தில் கல்வெட்டுப் பொறிக்கப்பட்டுள்ளது.

“கற்றவர்தாம் கண்ணிர்க் கடல்மூழ்கச் சாய்ந்துதமிழ்
உற்றகடல் மூழ்கி ஒளிந்ததே!-பெற்றநிலம்
எங்கும் ஒளிசெய் திறந்ததுரை சாமியெனும்
பொங்கு தமிழ்ச்சுடரிப் போது!”

என்று கூறுமாப் போல், கற்றவர்கள் கண்ணீர்சிந்த, மன்றங்கள் மனம் வருந்த, மாணவர்கள் உளம் வெதும்ப, நண்பர்கள் நலிவடைய - இங்ஙனம் பல்திறத்தாரும் துயர்க்கடலில் ஆழ, உரைவேந்தர், பொன்றாப் புகழை இவ்வுலகில் நிறுவித் தம் பொன்னுடல் நீத்தார்!

உரைவேந்தரின் நூற்றாண்டு நினைவைப் போற்றும் விழா ஒன்று, ‘அண்ணாமலைச் செட்டியார் நினைவு அறக்கட்டளை’யின் சார்பில், 25.9.2003 அன்று, சென்னையில் ‘அருட்செல்வர்’ நா. மகாலிங்கம் தலைமையில், மிகச் சிறப்புற நிகழ்ந்தது. பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட அறிஞர் பலர், உரைவேந்தருக்குப் புகழ் மாலை சூட்டினர்!

காரைக்கால் அம்மையார், இறைவனிடம்,

                  “இறவாத இன்பஅன்பு வேண்டிப்பின் வேண்டுகின்றார்
                   பிறவாமை வேண்டும்!”

என்று வேண்டியது போன்று, உரைவேந்தரும் இறைவனிடம் அவ்வாறே வேண்டியிருப்பார். ஆம்! இவர் செய்த - பழுதிலாத் தூய