பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை

ஒளவையார் குப்பத்தை விட்டுத் தஞ்சைத் திசைநோக்கித் தமது நெடிய இனிய தமிழ்ப் பயணத்தைத் தொடங்கினார்.

“அந்நாளில், ‘பழுமரம் நாடும் பறவை’போல், கரந்தைத் தமிழ்ச் சங்கம் என்னும் பேராலமரத்தினை நாடிச் சென்று, அதன் தண்ணிய நிழலிலே இளைப் பாறி, நற்றமிழ் நலம் மாந்தி, விழுதாக வெளிப் போந்து, பழந்தமிழின் வளமையையும், செழுமை யையும் தம் உரையாலும் எழுத்தாலும் வளர்த்துப் பரப்பிய பெருந்தொண்டில் ஈடுபட்ட புலவர் பெரு மக்கள் பலராவர். அவர்களுள் தலையாயவர் நம் ‘ஒளவை’

என்று, கரந்தையில் வாழ்ந்த பேராசிரியர் கு.சிவமணி கூறுவது இவண் கருதத் தகும்!

சிவமணக்கும் இன்சொல்; உருமணக்கும் திருநீறு இயலருள் ஒழுகும் கண்கள்; அருள் மணக்கும் திருநோக்கு இளநகை ஒளிர் செவ்வாய்; சொற்பொறுக்கும் செவிகள்; வீரவுரை நவிலும் நாக்கு: செம்பாகத் தமிழ் பேசிச் சிரிப்புக் காட்டும் முகம் எடுப்பான திருவுருவம் - இத்தனையும் கொண்டு விளங்கியவர் தமிழவேள் த.வே. உமாமகேசுவரனார். பொங்கு தமிழ்த்தாய்ப் பணி போற்றி நின்ற புலவர் குழாம் குடியேறத் தகுந்தவாறு, கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை வளர்த்த சான்றோர் இவர்! இத்தகு சங்கத்தோடு அணுக்கத் தொடர்புடைய புவர்கள் பலர். அவருள் குறிப்பிடத்தகுந்தோர் இருவர். ஒருவர், ‘கரந்தைக் கவியரசு’ சு. வேங்கடாசலம் பிள்ளை. மற்றவர், ‘நாவலர்’ ந.மு. வேங்கடசாமி நாட்டார்.

‘கரந்தைக் கவியரசு’ தஞ்சை தூய பேதுரு உயர்கலாசாலை, திருவையாற்று அரசர் கல்லூரிகளில் தலைமைத் தமிழ்ப் புலவராயிருந்து, கரந்தைக் கல்லூரிப் பேராசிரியராய் விளங்கியவர். இலக்கணத்தையும் இனிமையுறக் கற்பிக்கும் திறனும், எவரிடத்தும் இனிமையாகப் பழகும் பண்பும் கொண்டவர். ‘தமிழ்ப் பொழில்’ என்னும் திங்களிதழின் ஆசிரியராக இருந்தவர்.

அவ்வாறே, ந.மு. வேங்கடசாமி நாட்டாரும், திருச்சி பிசப் ஈபர் கல்லூரியிலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் தமிழ்ப்-