பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/33

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
34
உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

18. சைவ இலக்கிய வரலாறு,

19. நந்தா விளக்கு,

20. ஒளவைத் தமிழ்,

21. தமிழ்த் தாமரை,

22. பெருந்தகைப் பெண்டிர்,

23. மதுரைக் குமரனார்,

24. வரலாற்றுக் கட்டுரைகள் (வரலாற்றுக் காட்சிகள்),

25. சேரமன்னர் வரலாறு,

26. சிவஞானபோதச் செம்பொருள்,

27. திருவருட்பாப் பேருரை,

28. ஞானவுரை,

29. பரணர் (கரந்தை),

30. தெய்வப்புலவர் திருவள்ளுவர்,

31. புதுநெறித் தமிழ் இலக்கணம் (இரு பகுதிகள்),

32. மருள் நீக்கியார் நாடகம்,

33. மத்த விலாசம் (மொழிபெயர்ப்பு),

34. Introduction to the Study of Thiruvalluvar.

உரைவேந்தர், அக்காலத்தில், 'தமிழ்ப் பொழில்', 'செந்தமிழ்ச் செல்வி', 'செந்தமிழ் மற்றும் மலர்களில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்த சில நூல்களும் இப்பட்டியலில் உள்ளன.'ஒளவைத் தமிழ்' எனும் பெயரில் வெளிவந்த நூல்தான், 'நந்தா விளக்கு' எனும் பெயரில் மறுபதிப்பாக வந்துள்ளது.

இவற்றை ஊன்றி நோக்கினால், இவற்றில், சங்க இலக்கியங்கள் உண்டு; காப்பியங்கள் உண்டு; வரலாறு உண்டு, சைவமும் சைவ சித்தாந்தமும் உண்டு; நாடகம் உண்டு; மொழிபெயர்ப்பும் உண்டு; ஆங்கிலமும் உண்டு என்பது தெரியவரும்.

மேலும், முதன்முதலாக உரைவேந்தர் எழுதியது. 'மருள் நீக்கியார்' என்ற நாடக நூல் என்றும், அஃது அச்சாகவில்லை என்றும் கூறுகின்றார் தி.நா. அறிவொளி.