பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

உண்டு. இவற்றில், 'மருதத்திணை'க்கு மட்டும், முதற்கண் உரையெழுதத் தொடங்கினார் உரைவேந்தர். இந்நூல் 1938இல் வெளிவந்தது. இதனைப் பதிப்பித்தவர், உரைவேந்தரின் நன் மாணாக்கராகிய புலவர் கா. கோவிந்தன். இந்நூல் தோன்றிய காரணத்தைப் பின்வருமாறு புலப்படுத்துகின்றார் கோவிந்தன்:

"யாங்கள் சேயாறு போர்டு உயர்கலாசாலையிற் கல்வி பயின்று வரும்போது, ஆசிரியர் திருஒளவை சு. துரைசாமி பிள்ளையவர்கள் இவ்விளக்கவுரை யினை எழுதிவரக் கண்டோம். அவர்கள், எங்களுக்குத் திருக்குறளும் தொல்காப்பியச் சேனாவரையமும் கற்பித்து வருகையில், இடை யிடையே இந்நூற் செய்யுள்களின் பொருணலங்களை எடுத்துக் கூறுவர். யாங்களும் கேட்டுப் பெருமகிழ்வு கொள்வோம். மேலும், யாங்கள் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சைக்குப் படிக்க விரும்பியகாலத்தில், அப்பரீட்சைக்காக வரை யறுக்கப் பெற்ற மருதப் பகுதியின் உரையினைப் படிக்கநேர்ந்தபோது, இவ்வுரை எங்கட்குப் பேரின்பம் பயந்தது. இன்னோரன்ன நலங்களால் பேருக்கம் கொளுத்தப் பெற்ற யாங்கள் இதனை வெளியிடுவது தக்கதெனத் துணிந்து இவ்வெளி யீட்டுச் செயலில் மேற்கொள்ளத் தொடங்கினோம்!”

மேலும், இவ்வுரைநூல் அத்துணை எளிதாக வெளிவரவில்லை. தமிழ்ப்புலவர் சிலரும், செல்வர் சிலரும், "விளக்கவுரை எழுதிப் பதிப்பிக்கும் பணியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு" உரை வேந்தரை வற்புறுத்திப் பல்வேறு இடையூறுகளும் செய்யலாயினர். இத் தடைகளை எல்லாம் தாண்டித்தான் இவ்வுரைநூல் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐங்குறுநூறு முழுமைக்கும், உரைவேந்தர் எழுதிய உரை விளக்கத்துடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டது.

நற்றிணை உரை

சங்க இலக்கியங்களில் ஒன்றான 'நற்றிணை'யை முதன்முதல் வெளியிட்டவர் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் ஆவார். ஓலைச்