பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
48
உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை

சமயதத்துவ ஆராய்ச்சி உலகில் இந்நூல் மிக்க மதிப்பும் பயிற்சியும் பெற்றிருந்தது என்பது புலனாகும்.

இவ்வுண்மைகளை நன்கறிந்த உரைவேந்தர், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சிப் பேராசிரியராகப் பணிபுரிந்த போது, 'ஞானாமிர்த மூலமும் பழைய உரையும்' பதிப்பிக்க வாய்ப்புக் கிடைத்தது. இது குறித்து உரைவேந்தர் கூறுவது வருமாறு:

“சிறந்த நூற் பயிற்சி எனக்கு வாய்த்தபோது, ஞானாமிர்தக் குறிப்புக்கள் சில, சிவஞான பாடியத்தில் வரக் கண்டு, நூலை முழுவடிவில் படிக்க வேண்டும் என்ற வேட்கை உண்டாவ தாயிற்று. ஆகவே அதனை வாங்கிப் படித்த போது அதன் நலம் முற்றும் துய்ப்பதற்கு உரிய தமிழறிவு என்பால் இல்லாமை, மிக்க இடரை விளைத்தது. அதனால் சங்க நூற்பயிற்சியில் என் கருத்துப் படர்ந்தது. ஒரு சில நூல்களைப் பயின்றபின், ஞானாமிர்தத்தின் தமிழ்நலம் எனக்கு இன்பம் செய்வதாயிற்று!”

என்று இந்நூலின்பால் ஆர்வம் ஏற்பட்டமை குறித்துக் குறிப்பிடுவர். இது குறித்த ஏடுகள் கிடைக்கின்றனவா என்று தேடுவதில் முனைப்பாக இருந்தார்.

"1932ஆம் ஆண்டுக் கோடை விடுமுறைக்கு யான், என் ஊராகிய ஒளவையார் குப்பம் சென்றிருந்த போது, வீட்டின் ஒரு மூலையில் கிடந்த ஏடுகளைப் புரட்டிப் பார்க்கலானேன். அவற்றுள், ஒரு ஏட்டின் மேல், 'பெருமண்டுர்ச் சிபாலன் எழுதியது' என்ற குறிப்பு இருக்கக் கண்டு, அதனைப் பிரித்துப் பார்த்தேன். ஏடு ஒன்றைப் படிக்கவும், அதன்கண், 'இன்னிசை எழுவர்ப் பயந்தோள் - சுநந்தன் முதலிய எழுவரைப் பெற்றாள்' என்ற உரை இருக்கக் கண்டு, இது, ‘ஞானாமிர்தம்' என்று அறிந்து அதனைப் படியெடுத்துஅச்சுப் பிரதியோடு ஒப்புநோக்கி னேனாக, வேறுபாடுகள் பல இருப்பது புலனா யிற்று!”