பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/51

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
52
உரைவேந்தர் ஒளவை சு. துரைசாமிபிள்ளை


இந்நூலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்த போது மேற்கொண்ட பணி; ஆனால் மதுரைத் தியாகராசர் கல்லூரிக்கு வந்தபின்பே நிறைவுற்றது.

உரைவேந்தர் எழுதிய நூல்களிலெல்லாம், தலையாயதும் மிகுதியான பக்கங்கள் கொண்டதுமான நூல், ‘திருவருட்பா மூலமும் உரையும்’ ஆகும். இஃது ஆறு ‘திருமுறைகள்’ கொண்டது; 5818 பாடல்கள் உடையது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகம்,தனது பொன்விழாவைக் கொண்டாடியஞான்று. திருவருட்டாவை உரையுடன் வெளியிடும் செந்தமிழ்ப் பணியைத் தொடங்கியது. பொன்விழாவினில், இதன் முதற்பகுதி மட்டும் வெளிவந்தது; பின்னர் ஒவ்வொன்றாக வெளியிடப் பெற்றது.

இந்நூல் முன்னுரையில், பல்கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த வ.சொ. சோமசுந்தரம், பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:

“19ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தே, வள்ளல் இராமலிங்க அடிகளார் என்னும் ஓர் ஒளிப்பிழம்பு வடலூரில் தோன்றி, உலகுக்கே ஒளிசெய்தது. அவ் ஒளியிடைத் தோன்றிய இறைமுறையீடுகள் ‘அருட்பா’ என்னும் அரிய பெயரோடு ஆறுதிரு முறைகளாக வகுக்கப்பெற்றன... உயிர்களின் ஆன்மநேய ஒருமைப்பாட்டினை வற்புறுத்திய பெரும் அருளாளராக இவரை நாம் காண்கிறோம். மக்கள் பலரும் அருட்டிரு வள்ளலாரின் ஆறு திருமுறைகளையும் படித்த அளவிலேயே இறை வனிடத்து ஈடுபாடு கொள்வரேனும், முற்றிலும் பொருள் உணர்ந்து கொள்வார்களெனக் கூற இயலாது. இந்நிலையில் நல்லதொரு உரையை எழுதி நமக்களித்தவர் உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி பிள்ளையவர்கள் சிறந்த முறையில் எழுதிய இவ்வுரை, அருள்மணம் கொண்டு விளங்கு வதை யாவரும் உணர்வர்!”

திருவருட்விபாவில் தம்மை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டவர் ‘அருட் செல்வர்’ நா. மகாலிங்கனார் ஆவார். இவர், ஊரன் அடிகளாரைப்