பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முகவுரை

“நம் நாட்டில் கற்றோர் எனப்படுபவர் (இந்நாட்டில்) வாழ்ந்தார் என்றாலும் அவருடைய எண்ணங்களும் செயலும், பிறநாட்டவர் நல்கியனவாகவே இருந்தமையால், வேற்று நாட்டவராகவே விளங்கினர். குழவிப் பருவத்தே, தாய், தான் தந்த பாலொடு உடன் ஊட்டிய தமிழ் மொழியை இகழ்ந்தனர்; தமிழ் நினைவைக் கைவிட்டனர்; தமிழ் வாழ்வைத் துறந்தனர்; தமிழ்நடையைத் தாழ்த்தினர்; தமிழுடையை மாற்றினர்; தமிழ்க் கல்வியைத் துற்றினர்; தமிழ்ப் பண்பாட்டைக் கைவிட்டுத்தமிழ் மக்கட்குரிய சான்றாண்மையைக் கைதூவி, காலஞ் சென்ற தேசியகவி பாரதியார் கூறுவதுபோல ‘நாமமது தமிழரெனக் கொண்டு’ உயிர் வாழ்ந்தனர். ‘தாய்நாட்டிலிருந்து கொண்டே வேறொரு பேய் நாட்டு மக்களாக நம்மை மாற்றிவிட்டதே இந்த அந்நியமொழிக் கல்வி’ என அண்ணல் காந்தியடிகள் முதலிய சான்றோர் கழறிய சொற்கள் இன்னும் ஒலி மாறவில்லை!”

என்று 50 ஆண்டுகட்கு முன்பு (1954) எழுதிய எழுத்து இன்றுங் கூடப் பொருந்துவதாகவே உள்ளது. இவ்வாறு கூறியவர் உரைவேந்தர் என உத்தமர்களால் போற்றப்படும் ஒளவை. சு.துரைசாமி பிள்ளையாவர்.

சாதாரண ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, கல்லூரிப் படிப்பையும் தொடர முடியாமல், நகராட்சி அலுவலகத்தில் சேர்ந்து பணிபுரிந்தவர்; உள்ளத்தே ஆழப் புதைந்து கிடந்த தமிழுணர்வால், கரந்தைத் தமிழ்ச் சங்கம் போந்து, ஆசிரியப் பணியிலிருந்து கொண்டே ‘வித்துவான்’ தேர்வு எழுதிப் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்தவர்; தமது கடும் உழைப்பினாலும், முயற்சியினாலும் ஆராய்ச்சித் துறையில் வித்தகராக விளங்கியவர் ஏடு பார்த்து எழுதுதல்,