பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

உரைவேந்தர் ஔவை சு. துரைசாமிபிள்ளை


சுயம்பு, ஆக்கிநேயம், வீரம், இரெளரவம், மகுடம், விமலம், சந்திரஞானம், முகபிம்பம், புரோற்கீதம், இலளிதம், சித்தம், சந்தானம், சருவோத்தமம், பாரமேச்சுவரம், கிரணம், வாதுளம் என்ற இருபத் தெட்டாம். “நாற்பாதங்கள்: சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பது. ‘திருமிகு ஞானம், இலங்கொளி யோகம், நலங்கிளர் கிரியை, சரியை என்ற விரிதரு பாதம்”(ஞானா.7.) என்று வாகீச முனிவரும் கூறுவர்!”

ஆங்காங்கே பல்வேறு நூற்சான்றுகளை மேற்கோளாகக் காட்டிச் செல்வதும் உரைவேந்தரின் தனித்திறமை.

இந்நூலில் வரும் சிறப்புப் பாயிரச் செய்யுளில், ‘பொய்கண்டகன்ற மெய்கண்ட தேவன்’ எனும் ஓர் அடி வருகின்றது. இதற்கு உரைவேந்தர்,

         “பொய்காட்டிப் பொய்யகற்றிப் போதா நந்தப் பொருளாம்
          மெய்காட்டும் மெய்கண்டாய்!”

என்ற ‘உண்மை விளக்கம்’ என்ற நூலினைச் சான்று காட்டுவர்.

சிவஞான முனிவர், தென்மொழிக் கடலையும் வடமொழிக் கடலையும் நிலை கண்டுணர்ந்த சான்றோர். எனவே இவருடைய நூல்களில் வடமொழி பற்றிய கருத்துக்கள் நிறைய வருதல் இயல்பு.

அவர், இந்நூலில்,

“வடநூலார் யாப்பை ‘ஆனந்தரிய’ மென்றும், நுதலிய பொருளை ‘விடய’ மென்றும்; கேட்போரை ‘அதிகாரிகளெ’ன்றும்; பயனைப் ‘பிரயோசனமெ’ன்றும் கூறுப; யாப்புச் சம்பந்த மென்பாருமுளர்!”

என்று குறிப்பிடுகின்றார்.

இதனை உரைவேந்தர், பின்வருமாறு விளக்குவர்.

“ஆனந்தரிய மாவது, இன்னது கேட்டபின்பு, இன்னது கேட்கவேண்டுமென்னும் முறைமை உணர்த்துவது. ‘பின்’ என்னும் பொருளதாகிய ‘ஆநந்தரம்’ என்பது ‘ஆனந்தரியம்’ என வந்தது”

(ப VII)