பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5 நற்றமிழ் நாவலர்

“சொல்வன்மை அஞ்சாமை சோர்வின்மை யொடுவாதில்வெல்வன்மை யும்முடைய வித்துவச் சிகாமணிநீ! கம்பர்கவிக் கவினையுமுட் கரந்தமைந்த பொருட்சுவையும் இம்பர்உனைப்போலெவர்மற்றினிதறிந்தார்?எடுத்துரைத்தார்? பன்மொழிக்குந் தாயாகிப் பரந்துலவுந் தமிழ்க்கன்னி நன்மொழிக்கு நாயகனாய் நவிறலுநிற் குயர்வேயோ? குன்றழிக்குங் குமரனருள் கொழுந்தமிழை யன்றேபோல் இன்றளிக்கும் தலைவன்நீ எனலுநினக் கிசையேயோ?”

என்பது, உரைவேந்தரின் மாணவர், ‘கோமான்’ ம.வி. இராகவன் என்பாரின் புகழுரை!

‘நற்றமிழ் நாவலர்’ என்பது, ‘நற்றமிழில் பேசுவதில் நாவன்மையுடையவர்’ என்ற பொருள் தருவதோடு, நற்றமிழ்ப் பற்றும், நற்றமிழ் வழங்கும் தமிழ்நாட்டுப் பற்றும், நற்றமிழைப் பேசும் நந்தமிழினப் பற்றும் கொண்டு, மேடைதோறும் தமிழ் முழக்கம் முழங்கியவர் உரைவேந்தர் என்ற பொருளும் தருவதாம்.


ஆழ்ந்த தமிழ்ப்பற்று

‘இடைக்கலை’ வகுப்பை முழுதும் முடிக்க முடியாத சூழ்நிலையில், அப்படிப்பை நிறுத்திவிட்டுப் பொருள் வருவாயின் பொருட்டு நகராட்சியில் ‘உடல்நலத் தூய்மைக் கண்காணிப்பாளர்’ பணியில் அமர்ந்தார் உரைவேந்தர். ஆனால், ‘தம் வாழ்வனைத்தும் தமிழ் வாழ்வே’ என்ற குறிக்கோள், அப்பணியில் நீடிக்க விடவில்லை. அதை உதறித் தள்ளிவிட்டுத் தனித்தமிழ் பயின்று ‘வித்துவான்’. ஆகவேண்டும் என்ற வேட்கையால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நாடிவந்த உரைவேந்தரைத் தமிழவேள் உமா மகேசுவரனார், தம் பிள்ளைபோல்