பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நற்றமிழ் நாவலர்

85

கருதி, உடனே ஆசிரியப் பணியளித்து உதவினார்! உரைவேந்தரும் முறையாகத் தமிழ் பயின்று ‘வித்துவான்’ தேர்விலும் தேர்ச்சி பெற்றுத் தமிழாசிரியராக ஆனார் என்ற செய்திகள் முன்பே சுட்டப்பட்டன.

வடஆர்க்காடு திருவத்திபுரத்தில் இவர், தமிழாசிரியராகப் பணிபுரிந்தபோது, ‘ஒளவைத் தமிழகம்’ என்றதோர் அமைப்பு நிறுவப்பெற்றது. தமிழ் பயிலும் மாணவர்க்கு முறையாக இலக்கிய இலக்கணப் பயிற்சிகள் அளிக்கப் பெற்றன. அவர்களை உரைவேந்தர் ‘வித்துவான்களா’க ஆக்கினார்.

தமிழைக் கற்பிப்பதோடு மட்டுமன்றி, அயல்மொழித் தாக்குதல்களிலிருந்து தமிழைக் காக்கும் அரும்பணியிலும் உரைவேந்தர் முனைந்து நின்றார். 1938இல், கட்டாய இந்தியைத் தமிழகத்தில் திணிக்க அன்றைய ஆட்சியாளர் முயன்றபோது, அதனை எதிர்த்துத் தமிழவேள் உமாமகேசுவரனாரும், நாவலர் ச.சோ. பாரதியாரும், ‘முத்தமிழ்க் காவலர்’ கி.ஆ.பெ. விசுவநாதமும் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்து அணி திரட்டினர். அக்குழுவினர் வட ஆர்க்காடு மாவட்டத்திற்கு வந்தபோது, அவர்களை உரைவேந்தர் வரவேற்று, நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றார். அதன் விளைவாகவே, 12 ஆண்டுத் தமிழாசிரியப் பணியின்போது, பற்பல ஊர்களுக்கு அரசினரால் மாற்றம் செய்யப்பட்டுப் பல்வேறு இடையூறுகளுக்கும் ஆளானார்!

தம்மிடம் ‘வித்துவான்’ தேர்வுக்காகப் பாடம் பயிலவரும் மாணவர்கட்குத் தமிழை முறையாகக் கற்பித்தார். பாடம் தொடங்குவதற்கு முன், உரைவேந்தர், தாம் பாடிவைத்த பாடல்களை முதற்கண் படிக்க வேண்டும் என்பார். அப்பாடல்கள், அகத்தியர், தொல்காப்பியர், திருவள்ளுவர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் ஆகிய புலவர் பெருமக்களுக்கு வணக்கம் கூறுவனவாக அமைந்திருக்கும்.

உரைவேந்தர் எண்ணியிருந்தால், ‘வித்துவான்’ பட்டத்தோடு அமையாமல், தமிழ் முதுகலை, ‘முனைவர்’ முதலான பட்டங்களையும் பெற்று, ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகக்கூட ஆகியிருக்க முடியும். ஆனால் அவ்வாறு ஆக விரும்பவில்லை!


“‘பாழான இந்தப் பழந்தமிழ் ஏடுகளைத் தேடித் திரிந்து, ஆராய்ந்து கழித்த உங்கள் காலத்தை, பி.ஓ.எல்., எம்.ஓ.எல்., என்ற பட்டங்களைப் பெறுதற்குக் கழித்திருந்தால் உங்களது வாழ்க்கை