பக்கம்:இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை-ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமிப்பிள்ளை

7



அண்மைக் காலத்தில் நம்மிடையே வாழ்ந்தவர் உரைவேந்தர்’ எனினும் இவரது வாழ்க்கைக் குறிப்பை ஒருவரும் முறையாக எழுதி வைக்கவில்லை. புலவர் தி.நா. அறிவொளி எழுதிய வாழ்க்கைக் குறிப்பும், உரைவேந்தரின் நூற்றாண்டு நிறைவை யொட்டி வெளிவந்த ‘உரைவேந்தருக்கு ஒரு நூற்றாண்டு’ எனும் சிறுவெளியீடும்; அதில் வெளிவந்த கோமான் ம.வி. இராகவன் எழுதிய வாழ்க்கைச் சிறு குறிப்பும், சென்னையிலுள்ள என் ஆசிரியப் பெருந்தகை பேராசிரியர் திரு. கு. சிவமணி வழங்கிய ‘இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்த் திறனாய்வாளர் ஒளவை சு.து.” என்ற ‘கருத்தரங்கக் கட்டுரை’யும் இந்நூல் எழுதப் பெரிதும் துணைபுரிந்தன. உரைவேந்தரின் திருமகனார், மருத்துவர் திரு. ஒளவை து, மெய்கண்டான் அளித்த குடும்பச் செய்திகளும், உரைவேந்தரே, நூல்களின் முன்னுரைகளில் தந்த குறிப்புக்களும் கைகொடுத்து உதவின.

இந்த நூலை மேலும் விரித்து எழுதுவதற்கு இயலும்; நூலினைப் படிப்போர்க்கு அலுப்பு ஏற்படாதவாறு சுருக்கமாகவே எழுதப்பட்டுள்ளது!

இந்நூலைப் படிப்பவர் எவருக்காவது, அன்னைத் தமிழ்மீது தனியா ஆர்வமும் சைவசித்தாந்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற வேட்கையும் உண்டாகுமானால் அதுவே எனக்குப் பெரும் பேறு!

வாழ்க தமிழ்!
ச. சாம்பசிவனார்