பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/111

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

109


புறப்பட்ட பித்திநான்...என்னைத் தொடர்ந்து துன்புறுத்துவானேன்,
என்பிரிய சோதரரே!”
“உடுபுடைவை துறந்து, நிர்வாணமானாலும்,
கருங்கூந்தலை விரித்த உடலைமறைப்பதேன்?
உள்ளத்தில் உடலாசை உணர்வுகள் வைத்துப்
புறத்தில் துறவென்று ஆடை துறந்தாயே!”

என்று கேலி செய்து, வம்புக்கிழுத்தவருக்கு மாதேவியின் பதிலும் பாடல்களில் பிரதிபலிக்கிறது.

“மேனி வாடிக்கருகிப் போனாலும்,
மேவும் இளமை மினுமினுத்தாலும்,
என் உள்ளத்தின் உள்ளே துயஒளி போதுமே!
இந்தமேனி எப்படியானாலும் சென்னமல்லிகார்ச்சுன தேவருக்கே உரியது.
உள்ளம் பழுத்தாலன்றோ தோலின் நிறம்மாறும்!
ஆசையுணர்வுகள் அடையாளம் காட்டினால் துன்பமாகும் என்று
அன்பினால் அங்கங்கள் கூந்தல் கொண்டு மறைத்தேன்.
துன்புறுத்த வேண்டம் அண்ணா!
சென்னமல்லிகார்ச்சுன தேவரின் உள்ளத்தின் உள்ளே சேர்ந்தவள் இவளே...”

இந்தப் பாதையில்லாப் பெருவழியில், தேவி, மேற் கொண்ட ஆன்மீக இலட்சிய யாத்திரை அநுபவங்கள், தாப உணர்வுகள் போராட்டங்கள் யாவுமே கவிவாசகங்களாக கன்னட இலக்கியத்தின் அருங்குவியலாக வாய்த்திருக்கின்றன.