பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/19

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ராஜம் கிருஷ்ணன்

17


4. பர்த்ரு அல்லது பர்த்தா-பெண்களை வேறு குழுக்களில் இருந்து பலவந்தமாகக் கடத்தி வருபவன்.

5. துஹித்ரு-துஹிதா (Daughter என்ற ஆங்கிலச் சொல்லின் எழுத்துக்கள் இந்த மூலத்தில் நிலை கொண்டதே) பால் கறக்கும் பெண். குழுவுக்கான மந்தையில் பால் கறக்கும் செயலை இவள் மேற்கொள்கிறாள்.

6. பதி - தனியாக ஒரு வீடமைப்பவன். சுதந்தரமாக வாழ முற்படுபவன்.

பத்னி அந்த வீட்டை ஒழுங்குபடுத்துபவள்.

இந்த இரு சொற்களும் குழுவாழ்க்கையை விடுத்துத் தனிக் குடும்பமாக வாழத் தொடங்கிய பின்னரே பிறந்தவை.

பார்யா என்ற சொல்லுக்குக் கடத்திக் கொண்டு வரப் பட்டவள் என்பதே பொருள்.

பதி-பத்னி பதி-தனிக்குடும்பக்காரன். பத்னி-பதியை உடைய ஒரு பெண்.

(பத்தினி என்று இந்நாட்களில் குறிக்கப்படும் கற்புப் பொருளுக்கும் இந்த மூலத்துக்கும் தொடர்பே இல்லை)

இவ்வாறாக, தந்தையாதிக்கம் நிலைப்படுவதற்கு ஆண்-பெண் உழைப்பு பிரிவினை அடித்தளம் அமைத்தது.

ஆடவர் வெளியே சென்று வேட்டையாடினர்; விலங்குகளை உயிருடன் பிடித்துப் பழக்கினர். கொட்டிலில் கொண்டு வந்து கட்டினர். காடுகளை அழித்து நிலம் சீராக்கி, விளை நிலமாக்கியும், நீர் பாய்ச்சியும் தானிய உற்பத்தியிலும் ஈடுபட்டனர். பெண் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி நெருப்பைக் காத்தாள். கன்று காலிகளைப் பேணினாள். நீர் கொண்டு வந்து உணவு தயாரிக்கும் பொறுப்பை ஏற்றாள். கன்னிப் பெண்டிர் பால்கறந்து தயிர் மோர் தயாரித்தனர். குழுவினருக்கான தோல், கம்பளி

இ-2இ - 2