பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196


பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிற சிந்தனையைத் துண்டிவிடுகிறது இந்த நூல்.

இலட்சியத் தம்பதிகளாக வாழ்ந்த காந்தி—கஸ்தூரிபாய் வாழ்கையில்—ஏற்பட்ட திருப்பு முனை நிகழ்ச்சிக்கு முன் ‘மோகன்தாஸும்’ ஒரு சாதாரண ஆண் மகனாகத்தான் இருந்தார் என்பதையும் ஜவஹர்லால் நேருவின் மகள் இந்திரா காந்தியின் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளும் ஆண் ஆதிக்கத்தை எதிர்த்துப் பெண் நடத்திய போராட்டத்தின் சான்றுகளாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. இருந்தாலும் இந்திரா காந்தியின் வாழ்க்கைக் குறிப்புக்கு அதிக முக்கியத்துவம் இந்நூலில் கொடுக்கப் பட்டுள்ளதாகத் தோன்றுகிறது.

துணை இழப்பு—துறவறம்—இந்த அத்தியாயத்தில் சுமங்கலி—விதவை போன்ற சொற்கள் எப்படி ஆண் ஆதிக்கத்திற்குச் சாதகமான சொற்களாக அமைந்துள்ளது என்பதைப் பல உதாரணங்களில் விளக்கியுள்ளது அருமை.

பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பதையும் இன்றைய நாளில் அனுபவங்களில்—பெண் அதிகாரியின் கீழ் பணி புரியும் பெண்கள் தங்கள் அதிகாரி தங்களுக்கு வீட்டுக்கு சீக்கிரம் போக அனுமதி தராதபோது வசைபாடும் விதத்தையும் நகைச் சுவையோடு எடுத்துக் கூறியுள்ளது யதார்த்தமாக உள்ளது.

பெண் தன்னையே விமர்சனம் செய்து கொள்ள வேண்டும்; தான் எதற்காகப் பிறந்தோம்? ஆடை அலங்காரங்கள் செய்து கொள்ள மட்டும் தானா, கருவைச் சுமக்க மட்டும்தானா, ஆணைச் சார்ந்து மட்டுமே வாழ முடியும் என்கிற எண்ணத்தின் காரணமா—என்பதைச் சிந்தித்து அலச முற்பட வேண்டும். பெண் தன் உறவு முறைகளை மறந்து—தன் மனிதப்பிறவியை மட்டும் எண்ணி—தன்னை உணர்ந்துக்கொள்ள வேண்டும். கருப்பை செயல்பாடு—