பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



20

இந்திய சமுதாய... /விருந்தோம்பல் பண்பாடு


என்று வழங்காமல், பதிலாக, ஒரு பசு, ஒரு காளை இரண்டையும் மணமகனிடமிருந்து பெறலாம் என்று விட்டுக் கொடுக்கிறது. என்றாலும், இந்த-பரிசம், கண்டனத்துக்குரியதாகவே கருதப்பட்டிருக்கிறது.

தந்தையாதிக்கம், துவக்க காலங்களில் பெண்ணைச் சுதந்தரம் உடையவளாகவே வைத்திருக்கிறது. என்றாலும், பெண் மனையறம் பேணி மக்களைப் பெற்றுச் சமுதாய உற்பத்திக்கு இன்றியாமையாதவளாக இருந்ததால், விருந்தினருக்கும் வேண்டப்பட்டவருக்கும் இவள் சந்ததிக்காக வழங்கப்பட்டாள். தாய்மை நோக்கம், மனித வாழ்க்கையில் சாதனங்களும் பயன்படு பொருட்களும் கூடிய பிறகு, இழிந்து போய், போகம் என்று கூறு தலை தூக்கியது.

இந்த நிலையை மகாபாரத இதிகாசத்தில் வரும் பல வரலாறுகள் விளக்குகின்றன. அனுசாஸன பர்வம் இரண்டாம் அத்தியாயத்தில் சுதர்சனன் வரலாறு காணப்படுகிறது.

இல்லற தருமத்தில் முக்கியமான பண்பாடு விருந்தோம்பலாகும். சுதர்சன முனிவர் தம் மனைவி ஓகவதியிடம் இக்கடமையை வலியுறுத்துகிறார். இந்தத் தருமம் எப்போதும் எந்த நிலையிலும் பாலிப்பதற்குரியதாகும். உன் உடலையும் கூட விருந்தினருக்கு அளிக்க நீ தயங்கலாகாது என்று அறிவுறுத்துகிறார்.

சோதனைக்காலமும் வருகிறது. முனிவர் வெளியே சென்றிருக்கிறார். அப்போது ஒரு விருந்தினர் ஆசிரமத்துக்கு வருகிறார். விருந்தினருக்குரிய அனைத்து மரியாதைகளையும், உபசாரங்களையும் அவள் அளிக்கிறாள். அவரோ, அவளுடைய உடல் போகத்தை வேண்டுகிறார். கணவரின் சொற்களைச் சிரமேற்றாங்கிய ஓகவதி விருந்தினரின் விருப்பத்தை நிறைவேற்றுகிறாள்.

முனிவர் ஆசிரமம் திரும்பியதும் நடந்தவற்றைச் செவியுற்று, மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறார். இத்தகைய