பக்கம்:இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை.pdf/31

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.ராஜம் கிருஷ்ணன்

29


இவ்வாறே, இந்தப் பரசுராமர் வரலாற்றிலும், கொலைக்கான பரிகாரங்கள் பல வடிவங்களில் நிலைபெற்றிருக்கின்றன. இதிலிருந்து தாயாண் சமுதாயம் மிகக் குருரமாகப் பெண் கொலைகளினால் ஒடுக்கப்பட்டதென்று ஊகிக்கலாம். உயிரோடு கொளுத்தியும், வெட்டியும் அழித்துவிட்டு, நடுகற்களும்-பத்தினி வழிபாடுகளும் நிகழ்த்தப் பட்டன என்றாலும் சரியாகவே இருக்கும்.

எனவே, கதை இவ்வாறு தொடருகிறது.

முனிவர், உடனே பரசுராமரிடம், “நீ வெளியே சென்று முதலில் உன் கண்ணுக்குத் தென்பட்ட பெண் ஒருத்தியின் தலையைக் கொய்து கொண்டுவா!” என்று கட்டளை இடுகிறார்.

பரசுராமன் வெளியே வருகிறான். அவன் கண்களில் முதன்முதலில் தென்பட்டவள், ஓர் ஆதிவாசி அல்லது தாழ்ந்த குலத்தைச் சார்ந்த பெண். மையாங் இனம்; மடிக இனம் என்று சொல்லப்படுகிறது. அவளுடைய தலையைக் கொய்து வந்து முண்டமான தன் தாயின் தலையின் மீது பரசுராமன் வைத்ததும் ரேணுகை உயிர்பெற்றெழுகிறாள். தன் தாயை உயிர்த்தெழச் செய்வதற்காக, பரசுராமன் இன்னொரு பெண் கொலை செய்ததாக ஆகிறது. இது, முனிவர் ஆணையிட்ட கொலைக்குப் பிராயச்சித்தமானாலும், அந்தப் பெண்ணின் இனத்தாருக்கு, நிரபராதிகளுக்குச் செய்யப்பட்ட கொடுமையல்லவோ?

இந்தக் கருத்து, கர்நூல் மாவட்டத்து ஊர்களின் மாதங்கி வழிபாட்டில் பிரதிபலிக்கிறது. ‘மாதம்ம’ வழிபாடு என்றும் இது வழங்கப் பெறுகிறது.

தாழ்ந்த குலப் பெண்களின் பிரதிநிதியான ஒரு பெண், ‘மாதங்கி’யாக வரிக்கப் பெறுகிறாள். இவள் ‘சாமி’ வந்து ஆடுகிறாள். ஏனைய நாட்களில், இந்தத் தாழ்ந்த குலத்தினர் உயர் குலத்தோர் அருகில் வந்து நின்றாலே சுட்டெரிக்கப்