பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் பேராசிரியர் சுந்தரராமன் போன்றோர் இவ்விதமாகக் கருதியபோது. ஆரம்பகாலக் காங்கிரஸ் தலைவர்கள் ராஜ பக்திக்கும் தேசபக்திக்கும் வித்தியாசம் காண விரும் பாமல் காங்கிரசைக் கொண்டு தேசியத்தை வளர்த்தார்கள். "கடந்த காலத்தில் சுதேச ஆட்சியிடம் காட்டிய ராஜபக்தியை விட, அந்திய ஆட்சியிடம் ஆழ்ந்த ராஜ பக்தியை வெளிப்படுத்தி, பிரிட்டிஷ் பிரஜைகள் என்று கூறிக் கொள்வதில் பெருமை அடைகிறோம். இதற்குக் காரணம் யாதெனில் பிரிட்டன் சுதந்திரமும், பிரதிநிதித்துவமும் உள்ள அரசாங்க அமைப்பின் தந்தையாகும். அதன் பிரஜைகள், அதன் குழந்தைகள் என்ற முறையில் சுதந்திரத்தையும் பெற உரிமை உடையவர்களா கிறோம்." இவ்வாறு நவ்ரோஜி 1885 - ல் பம்பாய் காங்கிரஸில் கூறினார்." ராஜபக்தி விசுவாசத்தை வெளிப்படுத்தும் காங்கிரஸின் தீர்மானங்கள் 1886-ல் தொடங்கி எட்டு மாநாடுகளில் 1917 வரையில் நிறைவேற்றப்பட் டுள்ளன. மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் பேரரசின் கருணைக்கு வேண்டி நிற்கும் காட்சி காங்கிரஸ் தேசியத்தில் ஓர் அங்கமாகத் திகழ்ந்து வந்தது. ராஜவாழ்த்துடன் சபை நடவடிக்கைகள் தொடங்கப் பட்டது, பெருமையாகக் கொள்ளப்பட்டது. காங்கிரஸின் இந்தப் போக்கிற்கு, அரசியல் சாசன வழிக் கிளர்ச்சியில் உறுதியான நம்பிக்கையும் பிரிட்டன் "லிபரல் கட்சியை வழிகாட்டியாகக் கொண்டு * இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் -1973, பெ.சு. மணி - பூங்கொடி பதிப்பகம், சென்னை - ப.537.