பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது இந்தியாவில் செயல்புரிந்த காங்கிரஸ் மிதவாதிகளின் கொள்கைகளும் காரணங்களாகும். இந்தியாவில் தேசிய வளர்ச்சிக்கு உறுதுணையாக, துருவ நட்சத்திரமாக விளங்கிய பண்டித ஜவஹர்லால் நேருஜி தமது "உலக சரித்திரக் காட்சிகள்” என்னும் நூலில் காங்கிரசின் பிறப்பைக் குறித்துச் செய்துள்ள பின்வரும் விமர்சனமும் இங்கு நினைவு கூரத்தக்கது. "காங்கிரஸ் தோன்றிய காலத்தில் மத்திய வகுப்புக்கே பிரதிநிதியாக இருந்தது. சற்று ஏழைகளான மத்திய வகுப்பாருக்குக் கூட அதில் இடமில்லை. பொது ஜனங்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கும் அக்காலக் காங்கிரசுக்கும் சம்பந்தமே இல்லை . முக்கியமாக ஆங்கிலம் படித்த வகுப்பாரின் கட்சியை எடுத்துக் கூறும் கருவியாகவே அது இருந்தது. அதனுடைய நடவடிக்கைகள் நமது மாற்றாந்தாய் மொழியான ஆங்கிலத்தில் நடைபெற்றுவந்தன." - பாவேந்தர் பாரதிதாசன் “கே.எஸ். பாரதிதாசன்" எனும் பெயரில் புதுச்சேரி தேச சேவகன் எனும் தேசிய இதழில் 1923 மார்ச்சு 13-இல் தேச மகாமன்றம் (காங்கிரஸ்)" எனும் தலைப்பில் எட்டு கண்ணிகள் கொண்ட அற்புதமான "தேசியக் கீர்த்தனையை" எழுதி இருக்கிறார். மூன்றாவது கண்ணியில், ' முப்பத்து முக்கோடி மாந்தர் கருத்தில் முளைத்த பெருந்தெய்வமாய் - நன்கு மூளைத்த பெருந் தெய்வமாம் - ஒரு மெய்ப்பதம் உண்டெனில் உம்மினும் வேறொரு வீரக்குலம் புகல்வாய் - ஒரு வீரக்குலம் புகல்வாய்.