பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் விடுதலைப் போராட்ட வீரர் ம.பொ.சி. அவர்கள் "இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது (1986) எனும் நூலின் முன்னுரையில், காங்கிரஸின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இந்திய தேசியம் எனும் தத்துவத்தின் விளக்கத்தை மட்டுமல்ல, நூறாண்டு காங்கிரஸ் வரலாற்றையும் எழுதி உள்ளார். ம.பொ.சி. காங்கிரஸ் தலைவராக மட்டும் அல்லாமல் தமிழரசுக் கழகத் தலைவராகவும் சாதனை புரிந்தவர். - எனவே இந்திய தேசியத்தையும் தமிழரசுக் கழகம் மூலம் உருவாக்கிய தமிழ்த் தேசிய தத்துவத்தையும் இரு கண்களாகக் கொண்டிருந்தார். இந்திய தேசியத்திற்காக தமிழ்த் தேசியத்தையோ, தமிழ்த் தேசியத்திற்காக இந்திய தேசியத்தையோ விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இத்தகைய தெளிவான அரசியல் பார்வை கொண்ட ஐயா ம.பொ.சி. அவர்களின் இந்நூல் ஒரு வரலாற்று ஆவணமாகப் படைக்கப்பட்டுள்ளது. தற்கால அரசியல் தெளிவிற்கும் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் அவரை மறந்தாலும் உரிய வகையில் நன்றி பாராட்டாமல் இருந்தாலும் அவர் குறிப்பிடத்தக்க வரலாற்று ஆசிரியர் எனும் பொறுப்பில் தன் தேசியக் கடமையை இந்த நூலின் வாயிலாகச் செய்துவிட்டார், 23/11, இராமகிருஷ்ணாபுரம் 2வது தெரு மேற்கு மாம்பலம், சென்னை -33, 29-6-2013. பெ.சு.மணி