பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் ம. பொ. சிவஞானம் 15


யாகும். ஆனால், அதற்கு முன்பு - அதாவது, தேச விடு தலைக்கு முன்பு "இந்திய தேசிய காங்கிரஸ்" என்னும் பெயரையே அது பெற்றிருந்தது. சாதி மத வருண இன வேற்றுமையின்றி, இந்திய சமுதாயத்தினர் அனை வருக்குமான ஒரே அமைப்பாகத் தோன்றி, தேசம் விடுதலை பெறும்வரை அந்த நிலையிலேயே இயங்கி வந்ததால் இந்திய தேசிய காங்கிரஸ்" என்று அழைக்கப் பட்டது. அந்தப் பெயராலேயே, அதனுடைய தோற்றத் தையும் விடுதலைக்காக அது நடத்திய போராட்டங் களையும் விடுதலைக்கு முன்னும் பின்னும் அது புரிந்துள்ள சாதனைகளையும் ஆராய்வது பொருத்தமாக இருக்குமென்று நம்புகிறேன். வித்திட்டவர் வெள்ளையரே இந்திய தேசியக் காங்கிரசைத் தோற்றுவித்தவர், இந்தியாவில் இயங்கிய பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் சேவகம் புரிந்த சிவில் சர்விஸ் (ஐ.சி.எஸ்.) காரராவார். அவரது பெயர் ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் (1829-1912) ஆகும். பிரிட்டனில் பிறந்த ஆங்கிலேயரான இவர், 1857-ல் நடந்த சிப்பாய்ப் புரட்சியை ஒடுக்குவதிலே ஐ.சி.எஸ். அதிகாரி என்ற முறையில் கடமையாற்றினார். புரட்சியாளர்களால் தாக்கப்பட்டுப் படுகாய மடைந்தார். பின்னர், ஆங்கிலேய அரசு இந்தியர்களை நியாயமாக நடத்தவில்லை யென்று கருதியதன் காரணமாக, பிரிட்டிஷ் சேவையிலிருந்து விலகினார்.