பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் நலத்தையே பெரிதாக நினைக்காமல் உங்கள் தாய்நாடு நலமடையவும், நாடெங்கும் நியாயம் ஒங்கவும், பொன் விளைந்ததெனக் கூறப்படும் இந்திய நாட்டின் வளம் ஓங்கி நிற்கவும், உங்கள் அரசாங்க நிர்வாகத்தில் பெரும் லான பங்கை நீங்கள் அடையவும் முயற்சிகள் செய்து அதிகாரமேற்க நீங்கள் முன்வர வேண்டாமா? "நீங்கள் இப்படிச் செய்ய முன்வராமல் பதுங்கினால் உங்கள் நலனை நாடும் என்னைப் போன்ற நண்பர்களைக் கைவிட்டவர்களாவீர்கள். நம்முடைய பகைவர்களின் கரங்களைப் பலப்படுத்தி, அவர்களின் அநியாய நோக்கங்கள் எளிதில் கைகூடச் செய்தவர்களா வீர்கள். "இந்தியா என்றுமே மேலான சுதந்திர அந்தஸ்தை அடைய வழியில்லாமல் போய்விடும். நீங்கள் இப்பொழுது பின்னடைந்து நின்று, பிறகு, 'எங்களைச் சரியாக நடத்தவில்லை . நாங்கள் 'சிறுபிள்ளைகளா?' என்று ஓலமிட்டு அழுதால் அது ஆண்மைத்தனமாகுமா? செய்கையற்றவர்கள் மனிதர்களாவார்களா? "தேசபக்தியும் பொது நன்மைக்காகப் பாடுபட ஆர்வமும் இல்லாத நாட்டினரைப் பிற நாட்டார் தங்களுக்கு அடிமைகளாக்கி ஆண்டு வருவதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது? பிற நாட்டார் உங்கள் மீது அதிகாரஞ் செலுத்துவோராகவும் நீங்கள் அவர் களுக்குத் தொண்டு செய்வோராகவுந்தான் என்றும் இருக்கவேண்டிவரும்." இ.தே.நூ-2