பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் அமைப்பின் துணைக் குழுக் கூட்டத்தில் பேசியபோது வெளியிட்ட கருத்து வருமாறு. “காங்கிரஸ் ஒரு தேசிய ஸ்தாபனம். குறிப்பிட்ட ஒரு சாதியின் அல்லது வகுப்பின் நலனுக்காக அது வேலை செய்யவில்லை. அது, எல்லா இந்தியருடைய நலன்களுக்கும் எல்லா வகுப்புக்களுக்கும் பிரதி நிதித்துவம் வகிக்கின்றது. காங்கிரசைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் முதலில் ஒரு ஆங்கிலேயருக்குத்தான் தோன்றியது என்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கும் விஷயமாகும். ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் தான் காங்கிரசின் தந்தை." (காந்தி நூல்கள், தொகுப்பு -6 பக். 118) ஹ்யூம் விடுத்த அழைப்புக்கிணங்க, 1885 டிசம்பர் 28, 29 தேதிகளில் பம்பாய் நகரில் உள்ள கோகுல்தாஸ் தேஜ்பால் சம்ஸ்கிருதக் கல்லூரியில் இந்தியப் பிரமுகர்கள் 73 பேர் கூடினர். இவர்களில் சென்னை ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் 21 பேர். பம்பாய் (சிந்து உட்பட) ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் 8 பேர். பஞ்சாபியர் மூவர். வங்க மாநிலத்தவர் (பீகார், ஒரிசா, அசாம் உட்பட) மூவர். கிறித்துவரே முதல் தலைவர்! அயல் நாட்டுக் கிறித்துவரான ஏ.ஓ. ஹ்யூம் அவர்களால் நடத்தப்பட்ட மாநாட்டிலே இந்தியக் கிறித்தவரான உமேஷ்சந்தர் பானர்ஜி (1844-1905)