பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காங்கிரசுக்கு எம்மதமும் சம்மதம்! விடுதலைப் போரின்போது, இந்திய தேசிய காங்கிரசின் வருடாந்திர மகாசபை ஆண்டுதோறும் கூடுவது வழக்கமாகியிருந்தது. காங்கிரசானது சட்ட விரோத அமைப்பாக இந்திய அரசால் அறிவிக்கப் பட்டிருந்த கால கட்டங்களிலேகூட, ஒன்றிரு சந்தர்ப் பங்களிலே தடைச் சட்டத்தைத் தகர்த்து மகாசபை கூடிய துண்டு. காங்கிரசானது, தனது தேசியப் பண்பை வெளிப்படுத்தும் வகையில் வருடாந்திர மகாசபைகளில் பல மதத்தினரும் மாறி மாறித் தலைமை தாங்க வாய்ப்பளித்து வந்தது. மதவாரி பெயர்ப் பட்டியல் 1885-ல் நடந்த முதல் மகாசபையிலே, அன்றைய பெரிய வங்காளத்தைச் சேர்ந்த உமேஷ் சந்திர பானர்ஜி என்னும் இந்தியக் கிறித்துவர் தலைமை தாங்கினார். அதையடுத்தும் ஐந்து மகாசபைகளிலே இந்துக்களல்லாத பிற மதங்களைச் சேர்ந்த கனவான்களே தலைவர்களாகத்