பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது கிறித்துவப் பாரம்பரியத்தைச் சார்ந்திருந்து, பின்னர், பிரம்மஞான சங்கத்திற்கு மாறிய ஐரிஷ்காரரான அன்னி பெசன்ட் அம்மையாரும் 1917-ல் நடந்த கல்கத்தா மகாசபையிலே தலைமை தாங்கினார். முஸ்லிம்கள் (1) பத்ருதீன் தயாப்ஜி, (2) ரகீம்துல்லா முகமது சயானி, (3) நவாப் சையத் முகமது, (4) டி. அசன் இமாம். (1920க்குப் பிற்பட்ட காந்தி சகாப்தத்திலேயும் அக்கீம் அஜ்மல்கான், மௌலானா முகமது அலி, டாக்டர் அன்சாரி, மௌலானா அபுல்கலாம் ஆசாத் ஆகிய முஸ்லிம் கனவான்கள் மகாசபைத் தலைவர்களான துண்டு .) பார்சிகள் (1) தாதாபாய் நௌரோஜி, (2) டி.இ. வாச்சா, (3) சர். பெரோஸ்ஷா மேத்தா. பார்சிகளில் முதுபெரும் கிழவரான தாதாபாய் நௌரோஜி காங்கிரஸ் மகாசபையின் தலைமைப் பதவியை மூன்று முறை பெற்றார். இந்துக்கள் (1) பி. அனந்தாச்சார்லு. (2) சுரேந்திரநாத் பானர்ஜி, (3) சி. சங்கரன் நாயர், (4) ஆனந்த மோகன் போஸ், (5) ருமேஷ் சந்தர் தத், (6) நாராயண் கணேஷ்சந்திரவர்க்கர், (7) லால்மோகன் கோஷ்,