பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் (8) கோபாலகிருஷ்ண கோகலே, (9) டாக்டர் ராஷ் பிகார கோஷ், (10) பண்டித மதன்மோகன் மாளவியா, (11) பிஷண்நாராயணதார், (12) ஆர். எம். முதோல்கர், (13) பூபேந்திரநாத் பாசு, (14) சத்யேந்திர பிரசன்ன சின்ஹா (15) அம்பிகாசரண் மஜும்தர், (16) பண்டித மோதிலால் நேரு, (17) லாலா லஜபதி ராய், (18) சேலம் சி. விசயராகவாச்சாரியார். பொதுவாக, 1885 தொடங்கி 1920 வரை நடந்த 35 வருடாந்தர மகாசபைகளில் தலைமை வகித்தவர் களிலே, இந்துக்கள் 18 பேர், பிற மதத்தவர் 17 பேர். பெண்மைக்கும் தலைமை இந்திய தேசிய காங்கிரசின் வரலாற்றிலே பெண் மணிகள் நால்வர் மகாசபைத் தலைமைப் பதவியைப் பெற்றனர். அவர்கள் டாக்டர் அன்னிபெசன்ட் - 1917, கவியரசி சரோஜினி தேவி 1925, நெல்லி சென்குப்தா, சுதந்திர இந்தியாவில் இந்திரா காந்தி ஆகியோராவர். வங்காளப் பெருந்தலைவர் திரு. ஜே. எம். சென்குப்தாவின் மனைவி நெல்லி சென்குப்தா 1933ல் கல்கத்தாவில் தடையை மீறி நடந்த காங்கிரசில்' தலைமை வகித்துச் சிறைபுகுந்தார். காங்கிரஸ் மகாசபையின் தலைமைப் பதவியைப் பெற்ற தாழ்த்தப்பட்டவர் ஆந்திராவைச் சேர்ந்த திரு. சஞ்சீவய்யா ஆவார். இவர் சுதந்திர இந்தியாவில் இந்தப் பெருமையைப் பெற்றார்.