பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

26 இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது இந்திய தேசியக் காங்கிரசின் வரலாற்றிலே புரட்சிகர மான அரசியல் திருப்பங்களைக் கொடுத்த பெண்களிலே டாக்டர் அன்னிபெசன்டும் திருமதி இந்திரா காந்தியும் முக்கியமானவர்களாவர். பகுத்தறிவுக்கும் பாராட்டு இன்னொரு முக்கிய விஷயத்தையும் இங்கு சொல்லியாக வேண்டும். அது, மத நம்பிக்கையற்ற நாத்திகர்களும் காங்கிரஸ் மகாசபையிலே பெருமைக் குரிய இடத்தைப் பெற்றனர் என்பதாகும். தேசியக் காங்கிரசானது “எம்மதமும் சம்மதம்" என்ற தத்துவத்தை நடைமுறைப்படுத்தி வந்ததோடு, மதமற்றவர்களுக்கும் தன்னிலே இடம் உண்டு என்பதனைப் புலப்படுத்தியிருக்கிறது. பிரிட்டனைச் சார்ந்த திரு. சார்லஸ் பிராட்லா என்பவர் உலகறிந்த நாத்திகராவார், டாக்டர் அன்னிபெசன்ட் அம்மையார், இவரைத் தம் குருவாகக் கொண்டிருந்த காலமும் உண்டு. திரு. சார்லஸ் பிராட்லா, பிரிட்டிஷ் பார்லி மெண்டிற்கு முதன் முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, கடவுள் சாட்சியாக என்று சொல்லிப் பிரமாணம் எடுத்துப் பதவி ஏற்க மறுத்தார். அதனால், உறுப்பினர் பதவியை இழந்து, அதே பிரச்சினை மீது மறு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி கண்டார். இவர் காரணமாகத்தான் மனச்சாட்சி"ப்படிப் பிரமாணம் எடுத்துப் பதவி ஏற்கும் மரபும் பிரிட்டிஷ் பார்லி மெண்டில் ஏற்பட்டது. அது, உலகெங்கும் உள்ள