பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது பணிக்காக அவர் இந்திய மக்களின் இதயங்களிலே இடம் பெற்றார். அந்தப் பணிக்காக அவரைப் பாராட்டும் தீர்மானம் ஒன்று ஆறாவது காங்கிரஸ் மகாசபையிலே ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. திரு. பிராட்லாவுக்கு அளித்த மிகச் சிறந்த மரியாதை காரணமாக இந்திய தேசியமானது. "பகுத்தறிவு"க்குப் பகையானதன்று என்பதை ஆரம்ப காலத்திலேயே உலகறியச் செய்தது. நேருஜியும் பகுத்தறிவாளரே! இராம பக்தரான காந்தியடிகளின் சகாப்தத்திலேயும் இந்திய தேசிய காங்கிரசிலே நாத்திகர்கள் மதிப்பிற்குரிய ஒரு தனியிடத்தைப் பெற்றிருந்தனர். அவர்களிலே தமிழ் நாட்ட வரான தோழர் சிங்காரவேலரை இங்கு குறிப் பிட்டாக வேண்டும். “நான் மதவாதியல்ல, பொருள் முதல்வாதி" என்று தம்மை விளம்பரப்படுத்திக் கொண்ட பண்டித ஜவகர்லால் நேருவை ராம பக்தரான காந்தியடிகள் தமது வாரிசாகத் தேர்ந்தெடுத்ததையும் இங்கு நினைப் பூட்டியாக வேண்டும். உண்மையான ஒரு கம்யூனிஸ்டு சுத்தமான நாத்திகன்" என்றார் தோழர் லெனின். விடுதலைப் போராட்ட காலத்திலே இந்திய கம்யூனிஸ்டுகள் தேசிய காங்கிரசிலே தனிப் பெரும் சக்தியாக விளங்கினர் என்பதனைத் தேசிய காங்கிரசின் வரலாறு காட்டுகிறது.