பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் இந்திய தேசியக் காங்கிரஸிடமிருந்துதான் தேசியம் தோன்றியது. விடுதலைப் போராட்டக் காலத்தில் தேசியம் வேறு, காங்கிரஸ் வேறு என்று சொல்ல முடியாத நிலையில் இரண்டும் ஒன்றாகவே இருந்தனவெனலாம். இதனாற்றான் காங்கிரசுக்கு நூற்றாண்டு நிறைவு கொண்டாடப்பட்டபோது இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது" என்னும் பெயரில் நூல் எழுதி வெளியிட் டேன். ஆனால், இந்தியா விடுதலை பெற்றபின் தேசியம் வேறு, காங்கிரஸ் வேறு என்ற நிலை ஏற்பட்டது. விடுதலைக்குப் பின் காங்கிரஸ் என்ற அமைப்பு அரசியல் கட்சிகளில் ஒன்றாகி விட்டது. தேசியம் என்பது அனைத்துக் கட்சிகளுக்கும் பொதுவான சொத்தாகி விட்டது. 30.4.89, செங்கோல்