பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியம் நிறத் துவேஷமற்றது! காங்கிரஸ் மகாசபை தோன்றிய நாள் தொடங்கித் தேசம் சுதந்திரம் பெற்ற நாள்வரை இந்தியப் பெரு நாட்டிலே கிறித்துவர்களான ஐரோப்பியர்கள் பல லட்சக் கணக்கிலே வாழ்ந்து வந்தனர். அவர்களிலே சிலர், அரசாங்கத்தில் உயர் பதவிகளில் இருந்தனர். மற்றவர்கள் எல்லாம் வழக்கறிஞர்களாகவும், மருத்துவர்களாகவும், பாதிரிமார்களாகவும், கல்வி நிறுவனங்களிலே உயர்பதவி களை வகிப்பவர்களாகவும் இருந்து இந்திய சமுதாயத் திற்குத் தொண்டு புரிந்து வந்தனர், பெருவணிகர்க னாகவும், தொழிலதிபர்களாகவும் இருந்தவர்களும் உண்டு. சென்னையில் நடந்த மூன்றாவது (1887) மகாசபை வரை அரசாங்க உயர் பதவிகளிலிருந்த ஐரோப்பியர்களிலே இங்குமங்குமாக ஒரு சிலர் காங்கிரஸ் மகாசபைக் கூட்டங்களிலே கலந்து கொண்டதுண்டு. தன்னை நெருங்கி வந்த வெள்ளை அதிகாரிகளை வரவேற்று, அவர்களை காங்கிரஸ் கௌரவித்தது. ஆனால் மூன்றாவது காங்கிரசுக்குப்பின், அதிகாரப்