பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் 31 பதவிகளிலிருந்த வெள்ளையர்கள் காங்கிரசை அண்டவும் அஞ்சி, ஒதுங்கினர். ஆயினும், அதிகாரி களல்லாத வெள்ளையர்களில் சிலர், காங்கிரஸ் மகாசபையின் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்து வந்தனர். இந்திய தேசியக் காங்கிரசானது, நிறத் து வேஷத்தைப் பாராட்டியதேயில்லை. இந்திய தேசத்தை அடிமைப்படுத்தி ஆண்டவர்கள் வெள்ளை நிறத்தவரேயாதலால், அதன் காரணமாக, இந்தியாவிலும் பிரிட்டனிலும் வெள்ளையர்கள் நிறவெறி ஆணவத்தை வெளிப்படுத்தியதுண்டு. அந்தச் சூழ்நிலையிலும், தன்னை மனமாற விரும்பி, ஆதரவு காட்டிய வெள்ளை யர்களைக் காங்கிரஸ் மகாசபை தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொண்டது. 24 ஆண்டுக் காலம் வெள்ளையரே பொதுச் செயலர் காங்கிரசைத் தொடங்கி வைத்த ஹ்யூம் துரைமகனார், தொடர்ந்து 24 ஆண்டுக்காலம் - அதாவது, 1885 முதல் 1908 வரை இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபையின் பொதுச் செயலாளராகப் பதவிவகிக்க அனுமதிக்கப்பட்டார். முதல் இரண்டு மகா சபைகளிலே தம்மைத் தாமே நியமித்துக் கொண்ட நிலையில் ஹ்யூம் பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். அதன் பின்னர், ஆண்டுதோறும் மகாசபைப் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதவி வகித்தார். முதல்