பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

32 | இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது ஆறாண்டுக் காலத்திலே துணைச்செயலாளராக எவருமில்லாத நிலையில் பொதுச் செயலாளர் பொறுப்பை வகித்தார். பின்னர் 1891 தொடங்கி 1908 வரை இந்தியர் இருவர் துணைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரு. ஹ்யூம் அவர்களுக்கு உதவி புரிந்துவந்தனர். முதல் தலைவரும் வெள்ளைப் பெண்மணியே 1885 தொடங்கி 1916 வரை வருடாந்திர காங்கிரஸ் மகா சபைக்குத் தலைமை தாங்குபவர், அடுத்துவரும் ஓராண்டு முழுவதும் தலைமைப் பொறுப்பில் இருந்து, காங்கிரசை நடத்திச் செல்லும் வழக்கம் இருந்ததில்லை. பொதுக் கூட்டத் தலைவர் போல, மகாசபை முடிந்ததும், தலைவர் பொறுப்பும் முடிந்து விடும். அதனால், வெள்ளை நிறத்தவரும் கிறித்துவருமான திரு. ஆலன் ஆக்டேவியன் ஹ்யூம் அவர்களே, தொடர்ந்து 24 ஆண்டுக் காலம் காங்கிரசின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து வந்தார். இந்தியக் குடிமகளாகத் தம்மைப் பதிவு செய்து கொண்ட டாக்டர் அன்னிபெசன்ட் 1917-ல் கல்கத்தா காங்கிரசில் தலைமை ஏற்றதிலிருந்துதான் ஒரு மகா சபையின் தலைவரே அடுத்துவரும் மகாசபைக் கூட்டம் வரை தலைமைப் பதவியில் இருந்து கொண்டு காங்கிரசை நடத்திச் செல்லும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. டாக்டர் பெசன்டே விரும்பி, இந்த வழக்கத்தை