பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

34 - இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது பெருந்தலைவரான திரு. ஜே.எம். சென்குப்தா நெல்லி என்ற வெள்ளைப் பெண்மணியை மணந்தார். கசின்ஸின் கடுந்தவம் டாக்டர் மார்கரட் கசின்ஸ் என்பவர் பிரம்மஞான சங்கத்தைச் சேர்ந்த வெள்ளை நிறப் பெண்மணியாவார். ஐரிஷ் நாட்டில் பிறந்து இந்தியக் குடிமகளாக மாறியவர். காந்தி சகாப்தத்திலே, சென்னை நகரில் சட்டத்தை மீறியதற்காக இவ்வம்மையார், ஓராண்டு காலச் சிறைத் தண்டனை பெற்றார். காந்தி சகாப்தத்திற்கு முன்பே, டாக்டர் பெசன்ட் அம்மையாரும், டாக்டர் அருண்டேலும் சுயாட்சி (ஹோம்ரூல்) இயக்கத்தை நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டு, இரண்டு மாத காலம் உதகமண்டலத்தில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். காந்திசகாப்தத்திற்கு முற்பட்ட காலத்திலே, ஆண்டு தோறும் நடைபெறும் காங்கிரஸ் மகாசபைக்குப் பிரிட்டனிலிருந்து தொழிற் கட்சி எம்.பி.க்களான வெள்ளையர்கள் தனி ஒரு குழுவாகவே வந்து கலந்து கொள்வது வழக்கமாக இருந்தது. அவர்களில் சார்லஸ் பிராட்லா என்ற நாத்திகரைப் பற்றி முன்பே அறிந்தோம். வெறுத்தது வெள்ளை ஆதிக்கத்தையே ! காந்தி சகாப்தமானது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கடும் போர் நடத்திய காலமாகும். "இம்" என்றால் சிறைவாசம், ஏன்?' என்றால் வனவாசம்" என்ற