பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் நிலையிலே, காங்கிரஸ்காரர்கள் வெள்ளை நிறத்தவர் ஆட்சியில் வேதனையுற்றதுண்டு. அந்தக் காலத்தில் கூட இந்திய தேசிய காங்கிரசும் - குறிப்பாக, காங்கிரசைச் சேர்ந்த தனி நபர்களும் நிறத்துவேஷம் கொண்டிருந்த தில்லை . "வெள்ளை நிறத்தவரை நாங்கள் வெறுக்க வில்லை. அவர்களுடைய அரசியல் ஆதிக்கத்தையே வெறுக்கிறோம்" என்று காந்தியடிகள் அடிக்கடி கூறி, நிறத்துவேஷம் என்ற நோய் இந்திய தேசிய காங்கிரசை நெருங்காதபடிக் காத்து வந்தார். மிஸ் ஸ்லேடு என்னும் பிரிட்டிஷ் பெண்மணி ஒருவர் காந்தியடிகளின் சபர்மதி ஆசிரமத்தில் தங்கி அவருடைய சிஷ்யையாகவே மாறியதை உலகம் அறியும். அவர் பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி ஒருவரின் மகள் ஆவார். இவ்வம்மையார் இந்திய விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறை புகுந்தவர் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். இவ்வம்மையார் தமது பெயரை இந்திய மொழியில் மீரா பென் என்று மாற்றிக்கொண்டார். அகாதா ஹாரிசன் என்ற வெள்ளை மூதாட்டியும் காந்தியடிகளின் பக்தையாகி, இந்திய தேசியத்துடன் இரண்டறக் கலந்தார், பேடன்பவல் திருப்பத்தூர் (வ.ஆ) நகரைச் சேர்ந்த கிறித்துவப் பாதிரியான டாக்டர் பேடன் பவல் என்ற வெள்ளையர்,