பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது சென்னை நகரில் காங்கிரஸ் தொண்டர்கள் அன்னிய துணிக்கடை முன்பு மறியல் செய்த நேரத்திலே, போலீ சார் தடியடி நடத்தியதைப் புகைப்படம் எடுத்ததற்காகக் கைது செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சி பற்றிப் பிரிட்டிஷ் பார்லிமெண்டிலே வினா எழுப்பப்பட்டு, எதிர்க்கட்சியினரால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது. பிரிட்டிஷ் பிரதமர் சர்ச்சிலே தலையிட்டதால் டாக்டர் பேடன்பவலுக்கு விடுதலை கிடைத்தது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் டாக்டர் பேடன்பவல் காங்கிரஸ்காரராகவே மாறினார். காந்தி சகாப்தத்திலே, தாம் சத்தியாக்கிரகப் போரைத் தொடங்க நேர்ந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அதற்கான முன்னறிவிப்புக் கடிதத்தைத் தமது ஆசிரமவாசியான ஒரு வெள்ளையரிடமே கொடுத்து வைசிராயிடம் சேர்ப்பிக்கச் செய்தார் காந்தியடிகள், உப்பு சத்தியாக்கிரகம் தொடங்குமுன்பு, தமது சபர்மதி ஆசிரம வாசியான ரெஜினால் ரெனால்டு என்ற வெள்ளை யரிடமும், ஆகஸ்டுக் கிளர்ச்சியின்போது தமது பக்தை யான மீரா பென் (ஸ்லைடு) அவர்களிடமும் கடிதம் கொடுத்து வைசிராய்க்கு அனுப்பினார். இந்திய காங்கிரஸ் நிறத்துவேஷ மற்றது என்பதனை உலகறியச் செய்யவே அடிகள் இதனைக் கடைப்பிடித்தார். அடிகளார், தென்னாப்பிரிக்காவில் சத்தியாக்கிரகப் போர் நடத்திய காலத்திலே தீனபந்து ஆண்ட்ரூஸ் என்னும் ஐரோப்பியப் பெருமகனாரைத் தம்முடைய நண்பராகப் பெற்றார். அவர், அடிகள் இந்தியா திரும்பிய