பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சமூக சீர்திருத்தத்திலும் பங்கு இந்திய தேசிய காங்கிரசைச் சமுதாய சீர்திருத்த இயக்கமாக மட்டும் நடத்திவரவே சர். ஆலன் ஆக்டே வியன் ஹ்யூம் முதலில் நினைத்தார். ஆனால், வைசிராய் லார்டு டப்ரின் ஆலோசனைப்படி, அதனை அரசியல் இயக்க மாக்கினார். தொடக்க ஆண்டுகளில் சமுதாயச் சீர்திருத்தத்திலும் அது கருத்துச் செலுத்தியது. சீர்திருத்த மாநாடு காங்கிரஸ் வருடாந்திர மகாசபையின் முதல் நாள் கூட்டம் "சமூக சீர்திருத்த மாநாடு" என்னும் பெயரிலே நடத்தப்பட்டு வந்தது. ஆனால், “சமூக சீர்திருத்தம்" என்பது. இந்து மதத்திற்கு மட்டுமே தேவைப்படுகின்ற ஒரு பணியாக காங்கிரசிலிருந்த இஸ்லாமிய கனவான்கள் கருதினர். மற்றும், சமூக சீர்திருத்தம் என்னும் பெயரால் பசுவதையைத் தடுக்கவேண்டுமென்று இந்து கனவான் கள் வலியுறுத்தி வந்ததை இஸ்லாமிய கனவான்கள் விரும்பவில்லை. லோகமான்ய திலகர் போன்ற வைதிக இந்து கனவான்கள் ஆளுஞ்சாதியினரான ஆங்கிலேயருள் ளிட்ட பிற சமயத்தினரையும் தன்னுட் கொண்டுள்ள காங்கிரசானது, இந்து சமய சீர்திருத்தத்தில் ஈடுபடுவதை விரும்பவில்லை .