பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது சமயங்களிடையில் ஒருமைப்பாடு காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இதிகாசங்களும் புராணங் களும் வெறும் கற்பனைகள் என்று கூறி, அவற்றை மக்கள் கண்மூடித்தனமாக நம்புவதைக் கண்டித்தது. இந்தச் சூழ்நிலையில் சமய வழிப்பட சீர்திருத்தப் பணியில் ஈடுபடக் காங்கிரசுக்கு அதிக சந்தர்ப்பமிருக்க வில்லை, அந்த இடம் சூன்யமாக இருக்கவில்லை அல்லவா! அதனால், இந்தியர் அனைவரையும் ஒருமைப் படுத்தும் தேசியப்பணியில் மட்டுமே காங்கிரஸ் ஈடுபட்ட தென்றாலும், காங்கிரஸ் நடத்திய வருடாந்திர மகா சபைகளின் விளைவாக, இந்திய மதங்களிடையே நீண்ட நெடுங்காலமாக நிலவி வந்த பூசலானது குறைந்து, தேசிய ஒருமைப்பாட்டுணர்ச்சி வலுப் பெறலானது. காங்கிரஸ் மகாசபை தோன்றுவதற்கு முன்பு ஆளுஞ் சாதியாரான ஆங்கிலேயர் ஸ்தாபன ரீதியாகத் திரண்டிருந்தனர். முதலில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியும் பின்னர் சட்ட ரீதியில் இயங்கி வந்த இந்திய அரசும் ஆளுஞ்சாதியார் ஒருமைப்பட உதவிகரமாக அமைந்தன. அதுபோல, ஆளப்படும் சாதியாரான இந்தியரனைவரையும் ஒருமைப்படுத்தவும், அவர் களுடைய வாழ்க்கை உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கவும் அனைத்திந்திய ரீதியாக ஒரு அமைப்பு தேவைப்பட்டது. அந்தத் தேவையை நிறைவு செய்தது இந்திய தேசிய காங்கிரஸ். ' அரசியல் பொருளாதார ரீதியில் பார்க்குமிடத்து, இந்திய தேசிய காங்கிரஸ் தோன்றிய காலத்திலே பாரதப்