பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் பெருநாடு முழுவதிலும் மக்களில் மிகப் பெரும்பாலோர், வறுமை - கல்வியின்மை - பிணி ஆகிய கொடுமை களால் அவதியுற்று வந்தனர். தாங்கள் அனுபவித்து வரும் கொடுமைகளுக்கு நாடு அன்னியரால் சுரண்டப்படுவதுதான் காரணமென்பதை உணர்ந்து கொள்ளவும் மக்கள் சக்தியற்றிருந்தனர். அதை அவர்களுக்கு உணர்த்துவதற்காகவும் அனைத்திந்திய ரீதியில் ஒரு அமைப்பு தேவைப்பட்டது. ஆரிய சமாஜம், பிரம்ம சமாஜம் போன்றவை சமய வழிப்பட்ட தேசிய அமைப்புகளாதலால் அரசியல் - பொருளாதார ரீதியில் மக்களுக்குத் தொண்டாற்ற அந்த சமாஜங்கள் நினைக்கக் கூட இல்லை . அதற்கு, "அரசாங்கத்திற்கு எதிரான அரசியல்" எனப் பெயர் வைத்து. ஒதுங்கிவிட்டன. கல்வித் தொண்டு காங்கிரசானது, தான் தோன்றிய பின்னுள்ள இருபதாண்டு காலம்வரை அரசியலில் மிதவாதிகளின் முகாமாகவே இருந்து வந்தது. பொதுவாக, இந்திய சமுதாயத்திலுள்ள படித்த வர்க்கத்தின் தேவைகளைத் தேடித் தருவதிலேயே அது கருத்துச் செலுத்தி வந்தது. அப்போதும், தாதாபாய் நௌரோஜி, லோகமான்ய திலகர், வ.உ.சி. போன்ற பெருந்தலைவர்கள் சமுதாயத்தின் அடித்தளத்திலுள்ள ஏழை எளிய மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளிலும் கருத்துச் செலுத்தி வந்தனர். தாதாபாயின் தொண்டு இந்தியாவில் தேசிய காங்கிரஸ் தோன்றுவதற்கு முன்பே பார்ஸியான தாதாபாய் நௌரோஜி