பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

44| இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது ரானடே. கோபாலகிருஷ்ண கோகலே, லாலா லஜபதி ராய் போன்ற தலைவர்கள் சமூக சீர்திருத்தவாதி களாவர். லஜபதி ஆரிய சமாஜியாகவும் விளங்கினார். திலகர், ரானடே, கோகலே ஆகிய மூவரும் புனா நகரவாசிகளாவர். சமுதாயச் சீர்திருத்தத்திலே திலகருக்கு மிகுந்த அக்கறை உண்டாயினும், சமயச் சீர்திருத்தத் திலே அவர் அதிக அக்கறை காட்டவில்லை . அதிலே அவர் மிதவாதி. ஆயினும், மக்களனைவரும் சமமாகக் கல்வி பயில வேண்டுமென்பதிலே ஆர்வங் காட்டி, புனாவில் "பொதுஜனக் கல்லூரி"யை நிறுவினார். ரானடே சார்வ ஜனிக் சபா" என்னும் பெயரில் சமயச் சீர்திருத்த அமைப்பு ஒன்றை நிறுவினார். கோபால கிருஷ்ணகோகலே, இந்திய மக்களிடையே நிலவிய கல்வியின்மையைப் போக்குவதிலே எல்லை யற்ற ஈடுபாடு கொண்டிருந்தார். அதற்கென 1906-ல் "இந்திய ஊழியர் சங்கம்" என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவினார். உயர்தரக் கல்வி கற்றவர்களில் சிலரேனும் செல்வம் பெருக்குவதையும் உயர் பதவிகளை அடை வதையும் விரும்பாமல், இந்தியப் பொது மக்களுக்கு ஊழியம் செய்வதிலேயே ஈடுபட வேண்டுமென்று கோகலே போதித்து வந்தார். அப்படிப்பட்டவர்களையே இந்திய ஊழியர் சங்கத்தில் சேர்த்துவந்தார். கல்வி மசோதா கோகலே, 1902-ல் சொந்தச் செல்வாக்கால் இந்திய சட்ட சபையிலே இடம் பிடித்துக் கொண்டார்.