பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் 45 அச்சபைக்குள் சென்றதும் "கட்டாய ஆரம்பக் கல்வி மசோதா" என்னும் பெயரில் ஒரு சட்ட முன்வடிவைப் பிரேரேபித்தார். “இந்தியாவில் பள்ளிக்குச் செல்லும் பருவத்தை (ஐந்து வயதை) அடைந்துவிட்ட குழந்தை களுக்கெல்லாம் கட்டாயமாகவும் இலவசமாகவும் கல்வி தருவதற்கு அரசே பொறுப்பேற்க வேண்டும்" என்பது மசோதாவின் குறிக்கோள். இந்த மசோதாவை முன் மொழிந்து அறிஞர் கோகலே பலமணி நேரம் சொற் பொழிவாற்றினார். அப்போதெல்லாம் இந்திய சட்ட சபையில் வைசிராய்தான் தலைமை வகிப்பது வழக்கம். கட்டாய ஆரம்பக்கல்வி மசோதாமீது அறிஞர் கோகலே நிகழ்த்திய சொற்பொழிவைக் கேட்டு வைசிராய் கவர்ச்சியுற்றார். "இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி மக்களுக்கு இழைத்து வரும் கொடுமைகள் பலவாயினும், அவற்றுள் தலையாயது இந்தியக் குழந்தைகளுக்குக் கட்டாய மாகவும் இலவசமாகவும் கல்வி தர மறுப்பதாகும். அதன் மூலம் எதிர்காலத் தலைமுறையினரையும் அறியாமை யிலும் மூடநம்பிக்கையிலும் ஆழ்த்தி வைக்க முயல்வ தாகும்" என்று கூறி, சட்ட சபைக்குத் தலைமை வகித்த வைசி ராயின் காதுகள் கேட்க அவரது ஆட்சியைக் கண்டித்தார். அப்போது மத்திய அரசில் எவரும் அமைச்சர் என்னும் பெயரில் பதவி வகிக்கவில்லை . ஒவ்வொரு இலாகாவின் தலைவருக்கும் 'செயலர்' என்றே பெயர். அவர்கள் வெள்ளையர்களே! அதனால், கல்வித்துறைச் செயலரான வெள்ளையர்,