பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் என்பது பழைய நம்பிக்கைகளைப் பழித்தும் இழித்தும் பிரச்சாரம் செய்வதுதான் என்று கருதும் சீர்திருத்தவாதிகள் இந்த உண்மையை உணராமல் காங்கிரசை வெறும் விடுதலைக்குப் பாடுபட்ட அரசியல் அமைப்பாகவே கருதுகின்றனர். இந்தியாவிலே பிரிட்டிஷ் ஆட்சியாளர், மக்களுக்கு அற்ப சொற்ப அளவிலேனும் அளித்துவரும் கல்வி யானது, அடிமைப் புத்தியை வளர்ப்பதாகவே இருந்து வருகிறது என்பதனைத் தலைவர்கள் தம்பட்டமடித்துச் சொல்லி வந்தனர். அவ்வாறு அடிமைப் புத்தியை வளர்க்கும் அரசாங்கக் கல்வி நிறுவனங்களைப் பகிஷ்கரிக்க வேண்டுமென்ற இயக்கமானது, 1921க்குப் பின்னுள்ள காந்தி சகாப்தத்தில்தான் தோன்றியது. அது, ஒத்துழையாமை இயக்கத்தின் வேலைத் திட்டங்களுள் ஒன்றாகவும் அமைந்தது. ஆனால், காந்தி சகாப்தத்திற்கு முன்பே - மிதவாதிகள் எனப் பெயர் பெற்றோர் காங்கிரசை நடத்திக்கொண்டு வந்தபோதே - "தேசியக் கல்வி' என்னும் சித்தாந்தத்தின்படி சமுதாயத்தின் காங்கிரசால் முயற்சி எடுக்கப்பட்டது. இது, சமூக சீர் திருத்தத்திற்குப் புறம்பானதல்ல. மூட நம்பிக்கைக்கு முதல் அடி! இந்த வகையிலே, இந்திய தேசிய காங்கிரசானது, சமுதாயச் சீர்திருத்த இயக்கமாகவும் விளங்கியது. கல்வியின்மையானது கடந்த பிறவியில் செய்த பாவத்தின் விளைவு" என்று நம்பினர் இந்திய மக்கள்.