பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது இந்த மூடநம்பிக்கைக்கு முதல் அடி கொடுத்ததும் காங்கிரஸ் தொடங்கிய தேச விடுதலை இயக்கம்தான். பாரத மக்களிடையே பட்டினிப் பட்டாளம் பெருகிவருவதற்குக் காரணம், முற்பிறப்புப் பாவம் அல்ல; அன்னிய நாட்டார் இந்த நாட்டைச் சுரண்டிச் செல்வதன் தீய விளைவு" என்று சொல்லி, மக்களுடைய அறிவைச் சரியான திசைக்குத் திருப்பிவிட்டதும் தேசிய காங்கிரஸ்தான். சொர்க்கமும் நரகமும் மக்களுக்கு அக்காலத்திலும் சொர்க்கத்திலும் நரகத்திலும் நம்பிக்கை இருந்தது. சமய நம்பிக்கையற்ற சீர்திருத்தவாதிகள், அதெல்லாம் பொய் பொய்யே!" என்று முழங்குவதோடு தங்கள் திருப்பணி தீர்ந்து விட்டதாகக் கருதினர். காங்கிரசைச் சேர்ந்தவர்களோ, நரகமும் சொர்க்கமும் வேறு எங்கோ இல்லை; சொந்த நாட்டி லேயே அன்னியருக்கு அடிமைப்பட்டு வாழ்வதுதான் நரக வாழ்வு. அந்த அடிமைத் தனத்திலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக வாழ்வதுதான் சொர்க்க வாழ்வு" என்று மக்களுக்குச் சொல்லி வந்தனர். இதிலேயும் மக்களுடைய அறிவைக் கற்பனைத் திசையிலிருந்து திருப்பி, அறிவார்ந்த யதார்த்தப் பாதையிலே அவர்களை நடைபோடச் செய்த பெருமை இந்திய தேசிய காங்கிரசுக்கே உரியதாகும்.