பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது பிரதமர் ராஜீவ் காந்தியின் கரத்தால் இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டவன் என்ற காரணத்திற்காக - வெள்ளிக் கேடயம் பெற்றேன். இந்தச் சிறப்பு எனக்கு நடத்தப்படும் என்று எதிர் பார்க்காத நிலையிலே, “இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது" என்னும் பெயரில் தமிழரசுக் கழக வார ஏடான "செங்கோலி"ல் தொடர் கட்டுரையாக எழுதி வந்தேன். அதுவே இந்நூல் வடிவம் பெற்றுள்ளது. இந்த நூல் முழுக்க முழுக்க இந்திய விடுதலைப் போராட்ட வரலாறு அன்று. அப்படியொரு நூலை "விடுதலைப் போரில் தமிழகம்" என்னும் பெயரில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வெளியிட்டு விட்டேன். இந்திய தேசியக் காங்கிரஸ் தோன்றிய காலந்தொட்டு, தேச விடுதலைக்குப் பின்னும் 1985 வரையுள்ள ஒரு நூற்றாண்டுக் காலத்தில் காங்கிரஸ் புரிந்துள்ள சாதனைகளை விமர்சித்து இந்திய தேசியம்" என்னும் தத்துவத்தின் விளக்கமாகவே இந்நூலைப் படைத்துள்ளேன். இதனை வெளியிட்டு உதவிய பூங்கொடி பதிப்பக உரிமையாளர் திரு. வே. சுப்பையாவுக்கு எனது இதயபூர்வமான நன்றி உரித்தாகுக. சென்னை ம.பொ. சிவஞானம் 20-6-86