பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் " நாலுதிசையும் வாதந்தர்ய நாதம் எழுகவே! நரகமொத்த அடிமை வாழ்வு நைந்து கழிகவே! என்றார் பாரதியார். அவரே 'வானகம் இங்கு வந்திடல் வேண்டும்' என்றும் பாடினார். 'சொர்க்கம்' என்னும் பொருளிலேயே 'வானகம்' என்னும் சொல்லைப் பயன்படுத்தினார். சமுதாயச் சீர்திருத்தம் என்னும் பெயரிலே. தனியாக ஒரு இயக்கத்தைக் காங்கிரஸ் நடத்தவில்லை, அப்படி நடத்தி வைதிகர்களோடு மோதுவதும், அவர்களால் தூண்டப்பட்டு மூடநம்பிக்கைப் பாதையிலே நடைபோடும் மக்களோடும் போராடுவதும் உள்நாட்டுக் குழப்பத்தைத்தான் ஏற்படுத்தும். அதனால் அன்னிய ஆட்சி நிலைத்துப்போய் விடும். இந்த உண்மையைக் காந்தி சகாப்தத்திற்கு முன்பும் சரி; காந்தி சகாப்தத்திலும் சரி; இந்திய தேசிய காங்கிரசார் நன்கு உணர்ந்திருந்தனர். . அதனால், இந்தியாவின் விடுதலை இயக்கத்தையே சமுதாயச் சீர்திருத்த இயக்கமாக்கும் வகையில் எதிர் மறையில் காங்கிரஸ் தலைவர்கள் செயல்பட்டனர். 'காங்கிரஸ்' ஒரு தத்துவம்! இந்திய தேசிய காங்கிரசானது இந்தியாவிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் ஆண்டாண்டுதோறும் தனது இ.தே.-4