பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது பேரவையை அடுத்தடுத்து நடத்தி வந்ததன் காரண மாகத் தேசிய ஒருமைப்பாட்டுணர்ச்சி மக்களிடையே வலுப்பெற்று வந்தது. ஒவ்வொரு மகாசபையிலும் பல்வேறு மதத்தினரேயன்றித் தனித் தனி மொழிகள் வழங்கும் வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இந்துக்களில் நால்வேறு வருணத்தவரும் பங்கு கொண்டனர். அவர்களிலே, ஏற்றத்தாழ்வுடைய பல்வேறு சாதியினரும் சம அந்தஸ்திலே பங்கு கொண்டனர். இந்த அதிசயம் காங்கிரஸ் தோன்றுவதற்கு முன்பு இந்திய நாட்டில் நிகழ்ந்ததில்லை . இதனாற்றான், "காங்கிரஸ்" என்னும் பெயரில் ஒரு ஸ்தாபனம் தோன்றிய நாளை இந்திய தேசியம் பிறந்த நாளாகக் கருதி, அதற்கு இந்த ஆண்டிலே நூறு வயது நிறைவு பெறுவதாக நம்ப வேண்டியிருக்கிறது. காங்கிரஸ் என்பது ஒரு ஸ்தாபனம் மட்டுமல்ல; அது ஒரு தத்துவம்! 1885ல் நடந்த முதலாவது வருடாந்திர மகா சபையிலே 72 பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டிருக்க, இந்த எண்ணிக்கை ஆண்டுக்காண்டு வளர்ந்து வளர்ந்து காந்தியடிகளின் ஒத்துழையாமைத் திட்டத்தை அதிகார பூர்வமாக ஏற்றுக் கொண்ட நாகபுரி (1921) காங்கிரசிலே 14583 பிரதிநிதிகள் வெள்ளம் போல் குழுமினர், அதற்கு முந்திய மகாசபையில் கூட, 7031 பிரதிநிதிகள்தான் திரண்டிருந்தனர். நாகபுரீ காங்கிரசிலே ஒரு நவபாரதம் காட்சியளித்ததெனலாம். அதிலே சேலம் கிழவர்" எனப்படும் திரு. சி. விசயராக வாச்சாரியார் தலைமை வகித்தார்.