பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

52 இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது பாரதியாரின் பரவசம் ! தமிழ் நாட்டிலும் மாநில - மாவட்ட காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்றன. அதனோடு சேர்ந்து "சீர்திருத்த மாநாடு" நடப்பதும் வழக்கமாகியிருந்தது. மகாகவி பாரதியார் சீர்திருத்த மாநாட்டை வரவேற்றுச் "சுதேச மித்திரனி"ல் எழுதினார். அவர் வரவேற்று எழுதியது, 1920 சூன் 21ல் நெல்லையில் நடை பெற்ற தமிழ் மாகாண 22ஆவது அரசியல் மாநாட்டையும், அந்த மாநாட்டுப் பந்தலி லேயே சூன் 22, 23 தேதிகளில் நடைபெற்ற 22வது ஆசாரத்திருத்த மகாசபையையுமாகும். அது வருமாறு; “தமிழ் நாட்டு மக்களே! ஆரம்ப முதல் சமீப காலம் வரை ஆசாரச் சீர்திருத்தத் தலைவர்கள் பெரும்பாலும் தேசாபிமானம், ஸ்வபாஷாபிமானம், இந்திய நாகரிகத்தில் அனுதாபம் இம்மூன்றும் இல்லாதவர்களாக இருந்து வந்தபடியால் பொது ஜனங்கள் இவர்களுடைய வார்த்தையைக் கவனிக்க இடமில்லாமல் போய்விட்டது. எனினும் அவர்களுடைய கொள்கைகளில் பலவும் உத்தமமானவை என்பதில் ஐயமில்லை. "இப்போது இம்முயற்சி தேச ஜனங்களின் பொதுக் காரியமாகப் பரிணமித்துவிட்டது. எனவே, இவ்வருஷத்து மகாசபையில் தமிழ் மக்கள் பெருந் திரளாக எய்தி நின்று, சபையின் விவகாரங்கள் பெரும்பாலும் தமிழிலேயே நடைபெறும்படியாகவும், தீர்மானங்கள் பின்பு தேச ஒழுக்கத்தில் காரியப்படும் படியாகவும் வேண்டிய ஏற்பாடுகள் செய்யக் கடவர்.