பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

டாக்டர் ம. பொ. சிவஞானம் மாநிலந்தோறும் நடைபெற்ற அரசியல் மாநாடுகளி லேயும் இந்து - இஸ்லாமிய - கிறித்துவ - பார்ஸி - சீக்கிய மதத்தினர் எல்லோரும் உடன் பிறந்தாரைப் போலத் திரண்டு மகிழ்ந்தனர். இந்து சமயத்திலுள்ள பிறப்பு வழிப்பட்ட உயர்வு தாழ்வோடு கூடிய சாதி வேறுபாடானது, அரசியல் மாநாட்டுப் பந்தலிலே மறைந்தொழிந்தது. சமபந்தி விருந்து! மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு நடைபெற்ற விருந்திலே அப்துல்காதரும் அந்தோணியும் ஆராவமுத ஐயங்காரும் அமாவாசையும் ஒருவர் பக்கத்திலே ஒருவர் அமர்ந்து "எல்லோரும் ஓர் குலம்" என்னும் சமத்துவ நிலையில் சமபந்தி போஜனம் அருந்தினர். நாம் எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்ற புத்துணர்ச்சி பெற்று, தேசிய சித்தாந்தத்தை வளர்த்தனர். சுருங்கச் சொன்னால், வருடாந்திர தேசிய மகாசபையானது பல நதிகள் கலக்கும் ஒரு பெருங்கடல் போலக் காட்சி யளித்தது. 1921-ல் நாகபுரியில் கூடிய காங்கிரஸ் மகா சபையிலே, உலகெங்குமுள்ள இஸ்லாமிய மக்களின் மத உணர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையிலே கிலாபத் கிளர்ச்சிக்கு ஆதரவு காட்டப்பட்டது. அதனால், “இந்து முஸ்லிம் ஏக் ஹோ" என்னும் புதிய கோஷம் பிறந்தது. அத்துடன் “வந்தே மாதரம்" - "அல்லாஹு அக்பர்" என்னும் கூட்டு மந்திரங்களும் காங்கிரஸ்காரர்களால்