பக்கம்:இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

இந்திய தேசியத்திற்கு ஒரு நூறு வயது கோஷிக்கப்பட்டன. நாடெங்குமுள்ள சாமான்ய மக்களும் இந்தச் சமய 'ஒருமைப்பாட்டுணர்வுடைய கோஷங்களை எழுப்பினர். இதனால், ஒரு உண்மை வெளிப்பட்டது. ஆம்; எம்மதமும் சம்மதம் என்னும் சித்தாந்தத்தின் அடிப்படையின் வழியில் நிலவிய ஏற்றத்தாழ்வோடு கூடிய வேற்றுமைகளைப் போக்கவோ, நால்வருணப் பாகுபாட்டைத் தகர்க்கவோ, பாரத பூமியில் தனியாக ஒரு இயக்கம் தேவைப்படவில்லையென்ற உண்மையை மக்கள் உணர்ந்தனர். கூட்டு வழிபாடு தேசிய காங்கிரஸ் தோன்றுவதற்கு முன்பு சமயச் சீர்திருத்த அமைப்புகளாக இயங்கி வந்த ஆரிய சமாஜமும் பிரம்ம சமாஜமும் தார்மிக ரீதியில் தேசிய காங்கிரசை ஆதரித்தன. அந்த அமைப்புகளிலிருந்த முன்னணித் தலைவர்களிலே பலர் அவற்றில் இருந்து கொண்டே தேசிய காங்கிரசிலேயும் தொடர்பு கொண்டு தேச விடுதலைக் கிளர்ச்சியில் கலந்தனர், துவராடையணிந்த ஆரிய சமாஜத் துறவியான சுவாமி சிரத்தானந்தர், முஸ்லிம் சகோதரர்களாலேயே டில்லியிலுள்ள ஜும்மா மசூதிக்கு அழைக்கப் பட்டு, அவர்களோடு கலந்து இறைவழிபாட்டில் ஈடுபட 1919-ல் வாய்ப்புப் பெற்றார். இதுபோன்ற கூட்டு வழிபாடுகள் நாட்டில் பலவிடங்களில் நடை பெற்றன.